பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59


59 ளமையின், இப்பஞ்ச ருத்ரங்களே மிகச் சிறந்தன என்று இருக்குவேதிகள் பெரிதும் பாராட்டுவர். இவற்றுள் சில வற்றின் சாயனபாஷ்யக் கருத்து வருமாறு : எல்லா முணர்கின்றவனும், வேண்டியவற்றை அருள்கின்றவனுமாகிய உருத்திர மகாதேவனே யாம் எப்போது அழகிய துதிகளால் துதிப்போம்? (பக்கம், 1 இருக்குவேத பஞ்சருத்ரம்). எமது கிராமத்திலுள்ள பசு எருமை முதலான மிருகங்களும், எமது மக்களும், பிணியிலாதவர்களாய் வளரவேண்டுமென்று உருத்திரனே இனிது துதிக்கின் ருேம் (பக்கம் 6). மருத்துக்களை ஈன்ற உருத்திர பரமேசுவர! நின்னல் அருள் செய்யத்தக்க சுகமனைத்தும் எமக்கு உண்டாகுக. எம்மிடத்து, சூரியதரிசனம் எப்போதும் இருக்குமாறு செய்தருள்வாயாக. எமக்கு நல்ல மக்கள். உண்டாவார் களாக. நாங்கள் தழைத்தோங்குவோமாக (பக்கம் 12). உருத்திரபரமேசுவர! அனைவருக்கும் இன்பை யளித்தருளும். உனது திருக்கரத்தால் என்னைப் பாது காத்தருள்வாயாக. எனது பாவத்தைப் போக்கி எனது பிழைகளையும் பொறுத்தருள்வாயாக (பக்கம் 16). உருத்திரபரமேசுவர! நீ எல்லாம் செய்தற்கு உரியோ தைலின் உலகனைத்தையும் அடக்கி ஆளுகின்றன. உனேயன்றி ஒருவரும் வல்லுநர் இலர். ஆதலின் நீயே முத்தொழிற் குரியான் (பக்கம் 17). உருத்திர பரமேசுவரன், உண்மையில் மண்ணிலுண் டான மக்களே ஐசுவரிய முடையவர்களாகவும், விண்ணி