பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H * <now - . - o Ao H r" \! * \ | H - - - - - - - . AS-4 - * * * -: Dik} இயல் சுந்திரீர் முன்னுரை சொற்கோவும், தோணிபுரத் தோன்றலும், சுந்தரரும் திருநெறிய மெய்ஞ்ஞானத் தமிழ் பாடிச் சைவம் பரப்பிய வராவர். இம் மூவரும் பல்லவப் பேரரசு நிகழ்ந்த காலத் தில் திகழ்ந்தவர்கள். சுந்தரர் தம் நாளிலும் தமக்கு முன்னும் இருந்த அடியார்களேத் திருத்தொண்டத் தொகையால் துதித்தார். அந்நாள் முதல் பெரிய புராணம் பாடப்பெற்றது வரையிலும், அதற்குப் பின்னும், செந்தமிழ் நாட்டுச் சான்ருேர் அளவிலாத பெருமை யுடைய அடியார்களே அமயம் வாய்ப்புழி யெல்லாம் போற்றியுள்ளனர் என்பது கல்லெழுத்துக்களால் அறியப் படுவதாம். சுந்தரரைக் குறித்துக் கல்லெழுத்துக்களி னின்று அறியப்படுவனவற்றுள் சிலவற்றை இனிக் காண்போம்.

ஆலாலசுந்தரர் ஆலால சுங்தரர் என்பது சுந்தரர் திருக்கயிலையில் இருந்தபொழுது கொண்ட திருப்பெயர் ஆகும். இது திருவொற்றியூர்க் கோயிலில் உள்ள கல்வெட்டொன்றில் ஒரு விளாகத்துக்குப் பெயராயமைந்திருந்தது: —r தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகவெளியீடாகிய ஆயிரத்தெட்டாவது வெளியீட்டு விழா மலரில் வெளிவந்தது. 1. தென்னிந்திய கோயிற் சாசனங்கள், பாகம்1. சாஸ்னம் 523; 203 of 1912.