பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2


2 சாந்திக் கூத்தே தலைவன் இன்பம் ஏந்திநின் ருடிய ஈரிரு நடம் அவை சொக்கம் மெய்யே அவிநயம் நாடகம் என்றிப் பாற்படுஉம் என் மளுர் புலவர்' என்பதால் நாயகன் சாந்தமாக ஆடிய கூத்துச் சாந்திக் கூத்து எனப்படும். இவற்றுள், சொக்கம் என் றது சுத்த நிருத்தம்; அது நூற்றெட்டுக் கரணம் உடையது. மெய்க் கூத்தாவது தேசி, வடுகு, சிங்களம் என மூவகைப்படும். இவை மெய்த்தொழிற் கூத்தாகலின் மெய்க் கூத்தெனப்பட்டன. இவை அகச்சுவை பற்றி எடுத்தலின் அக மார்க்கம் என நிகழ்த்தப்படும். அகச்சுவையான இராசதம், தாமதம், சாத்துவிகம் என்பன. குணத்தின் வழியது அகக் கூத்தெனப் படுமே” என்ருர் குண நூலுடையார்; “அகத்தெழு சுவையான் அகமெனப் படுமே ' என்ருர் சயந்த நூலுடையார். அவிநயக் கூத்தாவது கதை தழுவாது பாட்டினது பொருளுக்குக் கைகாட்டி வல்லபம் செய்யும் பலவகைக் நாடகம் - கதை தழுவி வரும் கூத்து. திருவேங்கை வாசல் திருவேங்கை வாசல் கல்லெழுத்துக்களில் மூன்று, மேலே கூறிய சாந்திக்கூத்து ஆடுவதற்கு நிபந்தம்