பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78


78 கொள்வான் வேண்டிக் கிழவனுராக வந்து, சுந்தரரை நோக்கித் தமக்கு அடிமை செய்யவேண்டும் என்ருர். இருவர்க்கும் வாது நிகழ்ந்தது. திருவெண்ணெய் நல் லூரில் இவ்வழக்கு விசாரிக்கப் பெற்றது. கிழவனுரே வென்று பணி செய்யவேண்டுமென்ருர். இங்ங்னம் சிவபெருமான் தடுத்தாட்கொண்டமையின், “தடுத்தாட் கொண்டருளிய நாயனுள் ' என்றும், வழக்கில் வென்ற மையின், விரைந்து வெல்லும் பெருமாள்' என்றும், வழங்கப்பெற்றர். இவ்வழக்கு அரிய வழக்கு என் பதை நாம் அறிவோம். இவ்வரிய வழக்கின வென்றமையின் சிவபெருமான் அரியவான வழக்கு வென்ற பெருமாள் ” எனப்பெறுதல் பொருந்தும். இதனை நினைவு கூரும் நிலையில் திருவெண்ணெய் நல்லூர்க்கு அருகில் ஒருர், " அரியவான வழக்கு வென்ற பெருமாள் கல்லூர்' எனப்பெற்றது. மேற் கூறியன யாவும் இராசராசச் சம்புவராயனது கல்லெழுத் தொன்ருல் அறியலாம். மூன்ரும் குலோத்துங்கனது மூன்ரும் ஆண்டுக் கல்வெட்டும், ஏழாம் ஆண்டுக் கல்வெட்டும் இறைவனே ஆட்கொண்டதேவர் என்று சிறப்பிக்கின்றன. சொற்றமிழ் பாடுக என்ருர் தூமறை பாடும் வாயார் ; யாதினை அறிந்து என் சொல்லிப் பாடுகேன் என்ருர் சுந்தரர் ; முன்பெனேப் பித்தன் என்றமையின் பித்தன் என்றே பாடுக என்ருர் பரமனுர். இதனை 10. தென்னிந்திய கோயிற் சாஸனங்கள், பாகம் 1, உசாஸனம் 85. 11. 477 of 1921.