பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்பூண்டான் : திருவானைக்கா திருவானைக்கா, திருநெறிய மெய்ஞ்ஞானத் தமிழ் அருளிய சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவராலும் திருப்பதிகம் அருளப் பெற்ற சிறப்பினே யுடையது ; ஐம்பூதங்களுள் அப்புத்தலமாக விளங்குவது : யானே பூசித்துப் பேறு பெற்றமையால் திருவானைக்கா என்றும், இறைவன் வெண்ணுவல் (ஜம்பு) மரத்தின்கீழ் எழுந் தருளி யுள்ளமையால் ஜம்புகேசுவரம் என்றும், இறைவி தவஞ்செய்து ஞானுேபதேசம் பெற்றமையால் ஞானத் தலம் என்றும் பெயர்களை யுடையது ; காவிரி, இந்திர தீர்த்தம், சந்திர தீர்த்தம் முதலிய தீர்த்தங்களையுடையது; முற்பிறப்பில் சிலந்தியாயிருந்து வழிபட்ட புண்ணியப் பலனுல் அரசனுகப் பிறந்த கோச்செங்கட் சோழர் கட்டிய கற்றளிகளையுடையது ; ஐந்து மதில்களுள், இறைவர் சித்தராய் எழுந்தருளித் திருநீற்றைக் கூலியாகக் கொடுத்து எடுப்பித்த காரணத்தால் திருநீற்றுமதில் எனும் பெயர்கொண்ட மதிலையுடையது ; இறைவர் நீர்த்திரளில் எழுந்தருளியுள்ளமையால் நீர்த்திரள் நாதர் என்றும் வழங்கப் பெறுகிறர். பரமன் ஆரம்பூண்ட அற்புதம் இத்தலத்தில் நிகழ்ந்தது. க் ஆரம்பூண்டான் உறையூரின்கண் இருந்து ஆண்ட சோழவரசர் ஒருவர் மணியாரம் அணிந்துகொண்டபடியே காவிரியில்

  • திருக்கோயிலில் வெளி வந்தது.