பக்கம்:கல்விச் செல்வம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10



நமது கல்வியால் நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ளவேண்டும் இதுதான் கல்வியின் கோட்பாடு.

நம்மை நாமே அறியும்போது உள்ளத்தில் புத்துயிர் புதுமலர்ச்சி பெறுகிறது. இதுதான் அறிதொறும் அறியாமை காணல்.

மொழிக் கல்வியாயினும் தொழிற்கல்வியாயினும் ஒவ்வொரு நொடியும் நம்முள் புகப் புகப் புதுமை பொலியும் வாழ்க்கையின் உண்மைப்பொருள் வற்றாத ஊற்றாகப் பெருகும்.

எவன் எதனால் நிறைவடையாதவனாய் எப்பொழுதும் உண்மையைக் காணவிழைப்படுவானோ அவனே கல்வியைத் தேடுபவனாவான்.

இப்படிச் செல்பவன் தனிமனிதனாகி சமூகமாகி இந்த உலகையே மாற்றும் மாபெரும் மாந்தனாகிவிடுகிறான். இந்த மூல மாறுதலைத் தருவது கல்வியே.

கல்வியின் தொடர்பை உணரமேண்டுமானால் அதனைக் காலமும் உதரித்தள்ளாமல் அதனை விட்டு நீங்காமல் அதனை முழுதும் அறிந்துகொள்ள நமது ஆர்வச் செயலனைத்தையும் அதற்கே திருப்பவேண்டும்.

ஆதலால்தான் காந்தியடிகள் கல்விபற்றி கூறுகையில் :

“குழந்தையாயினும் சரி, வயது முதிர்ந்தோராயினும் சரி அவரவரிடத்துள்ள ஆற்றல்கள்