பக்கம்:கல்விச் செல்வம்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11



அத்துணையும் (உடல், உள்ளம், ஆன்மா) வளர விடுவது எதுவோ அதுவே கல்வி”-என்றார்.

மனிதனின் மாண்பை விளக்குவது கல்வி மனிதனின் கற்பனைத் திறனுக்கும், நம்பிக்கைக்கும். குறிக்கோளுக்கும் அடிப்படையாகும்.

மக்களை மாக்களின் நிலையிலிருந்து வளர்த்ததும் நாகரிகத்தின் உண்மையின் ஊற்றுக் கால்களைக் கண்டு பிடித்ததும் கல்வியே.

மனிதன் தன் கண்ணுக்குக் கல்வியாகிய ஒளியைத் தரவில்லையானால், ஒளி உலகத்திலும் அவன் குருடனாகவே வாழ்ந்திருப்பான்.

உலகத்தில் எண்ணற்ற மொழிகளைப் படைத்து அதனைக் கருத்தின் கருவியாக்கிய பெருமை மனிதனையே சாரும்.

மக்கள் எப்படி உருவானார்கள் என்ற கல்வியைத் தருவதும் கல்வியே.

ஒன்றேகுலம், ஒன்றே உலகம் என்று ஒற்றுமைக்கும் ஊன்றுகோலாய்இருந்து அனைத்துலகையும் ஒர் ஆளுமையின் கீழ்க்கொண்டு வருவதும் கல்வியே.

கல்வியால் மனிதனின் அறிவு மேம்பாட்டைவதும் ஒழுக்கம் உயர்வதும், பண்பாடு செழிப்பதும், வாழ்வின் ஒவ்வொரு துறையும் வளமுறுவதும் நாம் அறிந்ததே.

அந்தக் கல்வி பற்றிய நமது முன்னோர்கள் முதல் தற்காலத்தவர் வரை எண்ணிய