பக்கம்:கல்விச் செல்வம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்விச் செல்வம்


அவ்வினை யாளரொடு பயில்வகை ஒருகால்
செவ்விதின் உரைப்ப அவ்விரு காலும்
மையறு புலமை மாண்புடைத் தாகும்.
பிறர்க்குரை இடத்தே நூற்கலப் பாகும்
திறம்பட உணரும் தெளிவி னேர்க்கே.

சிலப்பதிகாரம்

நல்லோர் அவைக்களம் அகலாது அணுகுமின்.
தீயோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்.

மணிமேகலை

பேதமை மீளச் செய்கை மீளும்
செய்கை மீள உணர்ச்சி மீளும்
உணர்ச்சி மீள அருவுரு மீளும்
அருவுரு மீள வாயில் மீளும்
வாயில் மீள ஊறு மீளும்
நுகர்ச்சி மீள வேட்கை மீளும்
பற்று மீளக் கருமத் தொகுதி
மீளும் கருமத் தொகுதி மீளத்
தோற்றம் மீளும் தோற்றம் மீளப்
பிறப்பு மீளும், பிறப்புப் பிணி மூப்புச்
சாக்காடு அவலம் அரற்றுக் கவலை
கையாறு என்றிக் கடையில் துன்பம்
எல்லாம் மீளும் இவ் வகையான் மீட்சி.

புறப் பொருள் வெண்பா மாலை

புரிவின்றி யாக்கைபோல் போற்றுவ போற்றிப்
பரிவின்றிப் பட்டாங்கு அறி...

—2