பக்கம்:கல்வி உளவியல்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தைகளின் வளர்ச்சியும் துலக்கமும் 79 அல்லது பேட்டி , (6) கிலேமைச் சோதனைகள்'; (7) புறத்தேற்று முறைகள்’ என்ற முறைகளே மேற்கொள்ளலாம். இவற்றைப்பற்றிய விவரங்களை உளநூல்களில் கண்டு கொள்க. ஒருவருடைய ஆளுமையை அளப்பதற்கு குழவிப்பருவமே சிறந்தது என்று அறிஞர்கள் அனைவரும் கருதுகின்றனர். ஆளுமை வளர்ச்சிக்குக் குடிவழியும் சூழ்நிலையும் அடிப்படைக்கூறு களாகும். குடும்பம், விளையாட்டுக்குழு, உறவினர், பள்ளித்தோழர்கள், சங்கம் போன்ற சமூக கிலேயங்கள் யாவும் ஆளுமை வளர்ச்சியில் பங்கு பெறுகின்றன. வீட்டில் மட்டுக்குமிஞ்சிய செல்வம் கொடுத்தல், மாளுக்கர்களைப் புறக்கணித்தல், உட்குறைபாடுகள் முதலிய காரணங் களால் ஒருவருடைய ஆளுமை பாதிக்கப்பெறலாம். ஆசிரியர் இத் தகைய பழங்குறைகளைக் கண்டறிய வேண்டும்; பள்ளியில் இத்தகைய நோயூட்டும் நிலைகள் ஏற்படாதவாறு கண்காணிக்கவும் வேண்டும். ஒவ் வொருவருக்கும் தனித்தனி உள்ளக்கிளர்ச்சி எதிர்வினைகள் உண்டென் றும், அவற்றை அவரவரே கண்டறிந்து வாழவேண்டும் என்றும் காம் அறிதல் வேண்டும். இதுவே ஆளுமை வளர்வதற்குச் சிறந்த வழி யாகும். ஒரு குழந்தையின் கல்வி அது பிறந்தவுடனேயே தொடங்கிவிடு கின்றது. குழந்தை மூத்தோருடன் கொண்டுள்ள தொடர்பு, அவர்கள் அதனைப் பாதுகாக்கும் விதம், குழந்தை காணும் காட்சிகள், கேட்கும் ஒலி கள், இவை போன்ற பிறது.ண்டல்கள் ஆகியவை குழந்தையின் பாடத் திட்டத்தில் அமைந்துள்ளன. இவற்றைத் தக்க முறைகளில் கையாண்டு கற்பிப்பதினலேயே பையனது குணத்தை அமைக்கும் பல அனுபவங்கள் உண்டாகின்றன. குழந்தையின் திறமைகள் முதிர்ந்தால் அவனது கல்விக்குரிய செயல்களும் வாய்ப்புக்களும் அதிகரிக்கின்றன. இவை அதிகப் பயனளிக்க வேண்டுமாயின் எல்லா நிலைகளிலும் குழந்தையின் கல்வி அவன் வளரும் முறைகளுக்கேற்ப அமைய வேண்டும். இனி, குழந்தையின் வளர்ச்சியற்றிய சிறப்பியல்புகளைக் காண்போம். வளர்ச்சியின் சிறப்பியல்புகள் கற்றலையும் கற்பித்தலையும் சரியாகப் புரிந்து கொள்ளவேண்டு மாயின் வளர்ச்சியின் இயல்பினைத் தெளிவாக அறிந்து கொள்ள வேண் டும். வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கூறுகளைப்பற்றிய ஆராய்ச்சிகளை 14 கிலேமைச் சோதனைகள் - situation tests. . புறத்தேற்று முறைகள்projective procedures. 16 Apášušūsár-characteristics.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/100&oldid=777697" இலிருந்து மீள்விக்கப்பட்டது