பக்கம்:கல்வி உளவியல்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தைகளின் வளர்ச்சியும் துலக்கமும் 81 கள் உள்ளன. (எ.டு. குழந்தை நடப்பதற்கு முன் நிற்கப் பழகுகிறது; சரியாகப் பேசுவதற்குமுன் மழலைச்சொற்களைப் பேசுகின்றது. கெசல் என்ற அறிஞர் இதனை அழகாகக் கூறுகிருர்: “ஒவ்வொரு குழவியும் நிற்ப தற்குமுன் உட்காரப் பழகுகின்றது; பேசுவதற்குமுன் மழலையாடுகின்றது; உண்மையுரைப்பதற்கு முன்னர் பொய்யைப் புனேகின்றது; சதுரம் வரைவ தற்கு முன்னர் வட்டம் வரைகின்றது. பொது நலப் பண்பைக் காட்டு வதற்கு முன்னர் தன்னலப் பண்பை வெளிப்படுத்துகின்றது; தன்னை நம்பி யிருப்பதற்கு முன்னர் பிறரை நம்பியே இருக்கின்றது’. பெரும்பாலான குழந்தைகளிடம் வளர்ச்சியின் இந்த "மைல்கற்களை’-வளர்ச்சிக் கோலங்களை24-கிலேயான ஒழுங்கில் நடைபெற்று வருவதைக் காணலாம். (4) வளர்ச்சியின் விறுவிறுப்பு (வேகம்) ஒரே சீராக இருப்பு தில்லை. வளர்ச்சி தொடர்ந்து நடைபெற்ருலும், அதன் வேகம் அடிக்கடி மாறுகின்றது; விறுவிறுப்புத் தன்மையில் மாற்றம் காணப்பெறுகின்றது. குழவிப் பருவத்திலும்" பள்ளி செல்வதற்குத் தொடக்க கிலையிலும் வளர்ச்சி விரைவானது. பள்ளிசெல்வதற்கு இறுதி நிலையிலும் பள்ளிக் காலத்திலும் வளர்ச்சி மெதுவாகப் போகின்றது. திடீரென்று ஒரு செய லில் உயர்வு காணப்பெறலாம் ; பின்பு அவ்வேகம் குறைந்து விடலாம். இதிலிருந்து வளர்ச்சி நடைபெறவில்லை என்று கொள்ளுதல் தவறு. வளர்ச்சி காம் காண முடியாத நிலையில் நடைபெற்றுக் கொண்டுதான் உளது. (5) வளர்ச்சிக்குத் திட்டமான நெறிகளும் வகைகளும் உள : (i) குழந்தையின் வளர்ச்சி தலையிலிருந்து தொடங்கி, காலில் முடிவுறு கின்றது. (எ.டு. குழந்தை உட்காருவதற்கு முன்னர் தலையை கிமிர்த்து கின்றது. (ii) வளர்ச்சி நடுவில் தொடங்கிக் கடையில் முடிகின்றது. நுனியிலுள்ள உறுப்புக்கள் துலக்கமடைவதற்கு முன்னர் நடு உறுப்புக் கள் துலக்கமுறுகின்றன. (எ.டு. நடுநரம்பு மண்டலம் அமைந்தபின்னரே வெளி நரம்பு மண்டலம் கன்கமைகின்றது. (iii) வளர்ச்சி மொத்தச் செயலில்27 தொடங்கித் தனிச் செயலில் முடிகின்றது. உடலில் எந்தப் பாகத்தில் தூண்டல் ஏற்பட்டாலும் மற்ற எல்லாப் பாகங்களும் துலங்கு கின்றன. (எ.டு.) காலைக் கிள்ளில்ை குழந்தை உடல்முழுவதையும் அசைக்கின்றது. நாளடைவில் அசைவுகள் தனிப்பட்டுத் தெளிவாக 24வளர்ச்சிக் கோலங்கள் . pattern of growth, 25 விறுவிறுப்பு (வேகம்) : tempo. 28 குழவிப் பருவம் infallyே. 21 மொத்தச் செயல் - mass activity. 28 gaffè Qsuś - specialized activity. க.உ.-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/102&oldid=777701" இலிருந்து மீள்விக்கப்பட்டது