பக்கம்:கல்வி உளவியல்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தைகளின் வளர்ச்சியும் துலக்கமும் 35 களுக்கும் மிகுந்த வேறுபாடுகள் உள நாளடைவில் இவ் வேறுபாடுகள் மாறுகின்றன. குழந்தையின் தலையும் உடலும் கால்களைவிடப் பெரியவை. கால்கள் குட்டையானவை ; முகம் பெரியது. முகம் பல மாறுதல் அடை வதுபற்றிக் குழந்தை எவர் முகச் சாயலையுடையது என்று சொல்லுதல் முடியாது. ஆண்-பெண் வளர்ச்சி : ஒரு பருவத்தில் பெண் பிள்ளைகள் ஆண் பிள்ளைகளைவிட உடல்நிலையில் முதிர்ச்சியுற்று, அதே வயது ஆண்பிள்ளை களைவிட மூத்தோர்போல் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. குமரப் பருவம்' பெண்களுக்குப் பன்னிரண்டாம் யாண்டிலும், ஆண்களுக்கு பதின்மூன்ரும் யாண்டிலும் தொடங்குகின்றது. இப் பருவத்தில்தான் ஆண்களுக்குப் பின்னணியில் கின்ற பெண்கள் முன்னணியில் வந்து கிற் கின்றனர். 12-14 யாண்டுவரை பெண்கள் உயரத்தில் சிறந்து விளங்கு கின்றனர் ; 15-ஆம் யாண்டுவரை எடையிலும் சிறந்து விளங்கு கின்றனர். இதற்குள் ஆண்கள் இந்த ஓட்டத்தில் பெண்களைப் பிடிக்க வந்து பெண்களுக்கு முந்தியும் ஓடி வெற்றி அடைகின்றனர். ஆண்கள் பால்முதிர்வு பெறுவதற்கு 1 யாண்டுகளுக்கு முன்னரே பெண்கள் பூப்பெய்திப் பால்-முதிர்வு பெற்றுவிடுகின்றனர். புலன்கள் வளர்ச்சி ; பிறந்த குழந்தையின் துலக்கங்கள் பெரும் பாலும் நோக்கமற்றவையாகவே இருக்கும்; முழு உடல்பற்றியவை யாகவே இருக்கும். முதலில் இரண்டு கண்களும் சேர்ந்து செயற்படுவ தில்லை. இரண்டு கண்ணும் ஒருமுகப்பட்டு ஒரு பொருளைப் பார்க்கும் கிலை 15 நாட்களில் வருகின்றது. பொருள்கள் தோன்றுவதையும் மறை வதையும் காணமுடிகின்றது. பல குழவிகள் பிறந்தவுடன் ஒளிகளை அறியா ; சில நாட்கள் சென்ற பின்னரே அறியும். அழும் குழந்தை தாலாட்டுப் பாட்டைக்கேட்டு வாளா இருந்தால், ஒலிகளை அறிவதாக ஊகிக்கலாம். குழந்தைக்குப் பிறந்தவுடனே சுவையுணர்ச்சி உண்டா கின்றது. ஆயினும், சில திங்கள்வரை சுவையுணர்ச்சியில் அதிக வளர்ச்சி ஏற்படுவதில்லை. வாழ்க்கைக்கு வேண்டிய நரம்பு நுண்மங்கள்" யாவும் பிறக்கும் பொழுதே இயற்கையாக அமைந்து விடுகின்றன. ஆளுல், முழு வளர்ச் சியும் பெறச் சில யாண்டுகளாகும், மூளையின் பெரும்பகுதி செயற்பட ஆற்றலின் றிக் கிடக்கின்றது ; கீழ்நிலைப் பகுதியே தேர்ச்சியுடையது. கருவுலக வாழ்விலேயே சில நரம்புப்பாதைகள் ஏற்பட்டு, தேவையான sočjudgi Lúšouth - adolescence, si sãriou gloriosisir - neurones.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/108&oldid=777715" இலிருந்து மீள்விக்கப்பட்டது