பக்கம்:கல்வி உளவியல்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 கல்வி உளவியல் தல், மலம், சிறுநீர் கழித்தல்போன்ற பழக்கவழக்கங்களை முறைப்படுத்தி யும் உதவுகின்ருள். குளிப்பாட்டுதல், தாலாட்டுதல் போன்றவற்ருல் பாராட்டிப் பேசிவளர்க்கின் ருள் ; இன்னும் பல்வேறு முறைகளில் குழந் தைக்கு மனநிறைவு தருகின்ருள். குழந்தையும் தனக்கு மனநிறைவு தருய வர்களிடம் அன்பு கொள்கின்றது. இதுவே சமூகப்பண்பு வளர்ச்சிக்கு அடிப்பட்ை. கைகால்களின் இயக்கங்களாலும், புன்முறுவலாலும் குழந்தை மனநிறைவை வெளிப்படுத்துகின்றது. முகமலர்ச்சி, குரல், ஊற்றுணர்ச்சி முதலிய பல வேறுபாடுகளை உணர்ந்து குழந்தை தாயின் பாராட்டைப் பெரிதும் விரும்புகின்றது. இரண்டாம் திங்களில் குழவி தன்னைப் பார்ப்பவரைக் கண்டு புன் முறுவல் கொள்கிறது. பெரியோர்களை இவ்வாறு கண்டறிந்த பிறகே தன்னைப்போன்ற குழவிகளைக்கண்டு புன்னகை கொள்ளுகின்றது. சாதா ரணமாக 7, 8 திங்கள்வரை பிற குழவிகளிடம் அக்கறை கொள்வதில்லை. முதல் வயதின் இறுதியில் பிற குழவிகளின் விளையாட்டுப்பொருள் களில் மட்டிலும் அக்கறை கொள்கின்றது; அதுகாரணமாகச் சண்டையும் இடுகின்றது ; ஆளுல், குழந்தைகளிடம் அவ்வளவு கவனம் செலுத்து வதில்லை. ஏறக்குறைய 15 திங்களுக்குப் பிறகே பிற குழவிகளிடம் அன்பு காட்டுகின்றது. ஆளுல், இரண்டாம் வயதில் உண்மையான கூட்டுறவு அரும்புவிட்டு மலர்கின்றது. இரண்டு யாண்டிலிருந்தே பிற குழந்தைகளின் தனி விளையாட்டைப் பார்க்கின்றது. அதைப்போலவே தானும் செய்கிறதே யன்றி, அக்குழந்தையுடன் சேர்ந்து அதிகநேரம் ஒரே விளையாட்டை விளையாடுவதில்லை. இரண்டு குழவிகள் சேர்ந்து விளையாடும் கேரம் ஆண்டுதோறும் அதிகரிக்கின்றது. மூன்ரும் வயதில் குழவிகள் ஒரே பொருள்களைக் கொண்டு அருகிலிருந்து விளையாடுகின்றன ; ஆளுல் நான்காம் வயதில் வீடுகட்டி விளையாடுதல்போன்ற பெரிய விளையாட்டில் பல குழந்தைகள் சேர்ந்து விளையாடுகின்றன. யாண்டுதோறும் விள யாட்டுக் குழுக்களில் அதிகமாக ஒற்றுமைப் பாங்கையும் வேலையைப் பங் கிட்டுக் கொள்ளும் தன்மையையும் காண்கின்ருேம். இவ்வாறு வளரும் சமூகவளர்ச்சி குழந்தைகளின் அறிதிறன் 48 வளர்ச்சியையும் அறிவு" வளர்ச்சியையும் பொறுத்திருக்கின்றது. குடும்பமே சமூக உணர்ச்சியை முதன்முதலாக உண்டாக்குகிறது. குடும்பமே கல்வி கிலேயங்களில் முதன்மையானது என்பதை நாம் அறி வோம். சிறுவன் பிறர் பாராட்டை வேண்டுகின்றன் ; இகழ்ச்சியைத் 姓3 sååps - intelligence. 44 g/solo - knowledge.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/115&oldid=777730" இலிருந்து மீள்விக்கப்பட்டது