பக்கம்:கல்வி உளவியல்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$36 கல்வி உளவியல் மனவளர்ச்சி : அறிவு வளர்ச்சி மனம் அறிவுக்கூறு, உணர்ச்சிக்கூறு, முயற்சிக்கூறு என்ற முக்கூறு களைக்கொண்டது. முயற்சிக் கூறினை இயக்கவளர்ச்சியிலும் உணர்ச்சிக் கூறினை உள்ளக்கிளர்ச்சிகளின் வளர்ச்சியிலும் கண்டோம். ஈண்டு எஞ்சியுள்ள அறிவு வளர்ச்சியினைக் காண்போம். மேலே உடல்வளர்ச்சியினைக் குறிப்பிடுங்கால் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியையும் மூளையின் வளர்ச்சியையும் குறிப்பிட்டோம். முதல் நான்கு வயதுகளில் மூளை எடையில் சிறந்த வளர்ச்சி பெறுகின்றது என்றும், சற்றேறக்குறைய 20-ஆம் வயதில் முழு வளர்ச்சியையும் எய்தி விடுகின்றது என்றும் கண்டோம். மன வளர்ச்சி மூளைவளர்ச்சியையும் அனுபவத்தையும் சார்ந்தது. உற்றுநோக்குமிடத்து புலன் உணர்ச்சிக’, புலன்காட்சிக, கற்பனை , சிந்தனைக போன்ற பல செயல்கள் தோன்றுகின்றன. இவை தனிப்பட்ட படிகளல்ல ; ஆல்ை, தொடர்பாக நிகழ்பவை. சில நிலைகளில் சில கூறுகள் சிறப்பாகத் தோன்றும். ஏனைய வளர்ச்சிகளைப்போலவே இங்கும் பாகுபாடும் ஒருமைப்பாடும் உண்டாகின்றன. நாளடைவில் அறிவு ஆழத்திலும் அகலத்திலும் விரிவு அடைகின்றது. மன வளர்ச்சியில் சில பொதுப்பண்புகளை ஈண்டு. குறிப்பிடுவோம். அறிவு எல்லை விரிதல் : புதிதாகப் பிறக்கும் குழந்தைக்கு உலகம் மிகவும் சிறியதே. உடல் தேவைகளுக்கும் உடல் கலத்துடன் ஒட்டிய தொடர்புகளுக்கும் உரிய தூண்டல்களுக்கும் ஏற்றவாறு மட்டிலுமே குழந்தை துலங்குகின்றது. அதனுடைய விழிப்பு வாழ்க்கையின் பெரும் பகுதி இவ்வளவே. பிறந்து சில நாட்கள் கழிந்தபின்னரே காட்சிப் புலனும் கேள்விப்புலனும் செயற்படுகின்றன. அசையும் பொருள்களும் குரல் ஒலிகளும் முறையே கண்களையும் காதுகளையும் தாக்குகின்றன. நாளடை வில் காட்சிப் புலனும் கேள்விப்புலனும் தூரச்சூழ்நிலையுடன் அதிகமாகத் தொடர்பு கொள்ளுகின்றன. கால அறிவு பெருகுதல் : குழந்தை வளரவளர இடத்தால் சேய்' மையிலுள்ள பொருள்களைப் போலவே, காலத்தினுல் சேய்மையிலுள்ள நிகழ்ச்சிகளும் கவனம் பெறுகின்றன. முன்னேய அனுபவங்களும் வருங் கால எண்ணங்களும் குழந்தையின் அறிவில் பங்கு கொள்ளுகின்றன. 52 Liosir al-oritéfl - Sensation * * Lisu sārā tri-á - perception . *4 &spu%T - imagination. &#5%r - thinking.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/119&oldid=777739" இலிருந்து மீள்விக்கப்பட்டது