பக்கம்:கல்வி உளவியல்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 கல்வி உளவியல் லும் அறிதல்கூடும். அடுத்தமுறை ஒரு வேட்டை நாயைக் காணும் பொழுது அதன் ஓட்டம், குரைத்தல், நான்கு கால்களிருத்தல், தன்னை விடப்பெரிதாக இருத்தல், கறுப்புகிறம் ஆகியவற்றை அறியும். இந்த இரண்டு புலன்காட்சிகளிலிருந்து குழந்தை முதல் நான்கு பண்புகளை மட்டிலும் கொண்டு நாயைப்பற்றிய ஒருவித எண்ணத்தைப் (motion) பெறுகின்றது. இன்னெருமுறை இன்ளுெருவகை வேட்டை நாயைப் (spaniel) பார்க்கும்பொழுது அக் காய் ஓடுவதையும், குரைப்பதையும், அதற்கு நான்கு கால்களிருப்பதையும், தன்னைவிடச் சிறிதாக இருப்பதை யும் காண்கின்றது. இப்பொழுது மாறுபட்ட பண்புகள் மறைகின்றன : ஒன்றுபட்ட பண்புகள் மட்டிலும் ஒருங்கிணைந்து உரம்பெறுகின்றன. நாயைப்பற்றிய முன்னைய எண்ணத்தைவிட இப் புதிய எண்ணம் வலுவாக வுள்ளது. இதில் மூன்று பண்புகளே இடம் பெற்றுள்ளன; மூன்று பண்புகள்-புலன்காட்சிகள்-ஒரு பொது உணர்வாக அமைந்துள்ளது. எனவே, பொதுஉணர்வு என்பது தனிப்பட்ட பொருள்களை வகைகளாக வும், சிறப்புப் பொருள்களைப் பொதுப் பொருள்களாகவும், பல பொருள்களை ஒரு பொருளாகவும் அறியவல்ல ஆற்றலாகும். பூனேயினம்’ என்ற ஒரு பொது உணர்வு பூனைகள், சிங்கங்கள், புலிகள், சிறுத்தைப் புலிகள், காட்டுப் பூனேகள் முதலியவற்றின் புலன்காட்சிகளின் ஓர் உத்தமப் பொதுக்காரணியாகும்; அவற்றிடம் பொதுமையாகவுள்ள பண்புகள் யாவும் பொது உணர்வாகின்றன. எனவே, புலன்களின் முன்னர்த் தனித்துத் தோன்றுவது புலன்காட்சி; மனத்தின் கண் பொதுவாகக் காண்பது பொது உணர்வு. பொது உணர்வை மானதக் காட்சி என்றும் வழங்குவர். கற்பனை" என்பது இன்னெரு அறிவுச் செயலாகும். கற்பனை என்பது புலன்களுக்கு எட்டாத பொருள்களை அறிவது: புலன்களை உறுத்தும் பொருள்களை அறிவது புலன்காட்சி. என் வீட்டிற்கு எதிரே யுள்ள கோவிலின் கோபுரத்தைக் காண்பது புலன்காட்சி ; இராசராச சோழன் எடுத்த தஞ்சைக் கோபுரத்தை மனத்தின்கண் பார்ப்பது கற்பனை. புலன் காட்சியில் வெளிப்பொருள்கள் மனத்தின் செயலே எழுப்புகின்றன ; கற்பனையில் மனத்தின் தொழில் உள்ளிருந்தே எழுகின் றது. சிறுவர்களின் விளையாட்டுக்களில் தோன்றும் ஒருவிதக் கற்பனை பாவனை" என்பது. சிறுவர்களின் விளையாட்டில் நாற்காலி கப்பலாகின் றது; செங்கற்பொடி வெடிமருந்தாகின்றது. ஊசல்பலகை புகை வண்டி யாகின்றது. அவர்கள் விளையாட்டில் விலங்குகளும் பேசுகின்றன. சில சமயம் அவர்கள் வண்டியோட்டிகளாகவும், பாற்காரர்களாகவும், ஆசிரி

  • 7 spu&r-imagination. 6 sum suður - make-believe.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/123&oldid=777750" இலிருந்து மீள்விக்கப்பட்டது