பக்கம்:கல்வி உளவியல்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 கல்வி உளவியல் வயது எல்லையையும் மறைமொழி'யாகக் கொள்ளவும் வேண்டியதில்லை. இவை யாவும் குழந்தைக்குக் குழந்தை மாறக்கூடியவை; இவை யாவும் குழந்தைகளின் குடிவழியையும் அவை வளர்ந்துவரும் சூழ்நிலையையும் பொறுத்தேயிருக்கும். ஒவ்வொரு பருவத்தின் சிறப்பியல்புகளைச் சிறிது smrstor Guirth.* குழவிப் பருவம் (0-3) வயது இப் பருவத்தில் ஏற்படும் வளர்ச்சி விவரங்களை ஆங்காங்கு முன்பே குறித்துள்ளோம். இது குழந்தை பெரும்பாலும் பெற்ருேரைச் சார்க் திருக்கும் பருவம். இப் பருவத்திலும் குழந்தை அன்னையின் பராமரிப்பி. லிருக்கும். இதில் குழந்தை விரைவான வளர்ச்சி பெறுகின்றது. உடல் வேகமாக வளர்கிறது. இயக்க ஆற்றலும் தோன்றுகின்றது. குழந்தை படிப் படியாகத்தசை இயக்கங்களை ஒன்றுபடுத்தவும் தன்னுடைய உறுப்புக்களை ஒரு கோக்கத்திற்குப் பயன்படுத்தவும் கற்றுக் கொள்கின்றது. இப் பருவத் தில் குழந்தையின் நோக்கம் யாவும் தசை, நரம்பு இயக்கங்களையும் உறுப் புக்களையும் ஒருமைப் படுத்தலேயாகும். இயக்கத்துண்டல்களையுடைய பொருள்கள் யாவும் குழந்தைக்குக் கவர்ச்சி தரும். உடலும் உறுப்புக் களும் செயற்படுவதற்கு வாய்ப்பினைத்தரும் விளையாட்டுக்கள் யாவும் குழந்தையைக் கவரும். சாதாரணமாக ஒடுதலையும் தாண்டுதலையும்கூட குழந்தை அதிகமாக விரும்பும். இப் பருவத்தில் புலன்கள் துலக்கமடைகின்றன. புதிய பொருள் களைப்பார்ப்பதாலும், புதிய ஒலிகளைக் கேட்பதாலும், புதிய பொருள்களைக் கையாளுவதாலும் குழந்தை தொடர்ந்து புதிய அனுபவங்களைப் பெற்ற வண்ணமிருக்கின்றது. இதல்ைதான் குழந்தை துருதுரு" வென்று இருக் கின்றது.தனக்கு முன்னுள்ள உலகைச்சதா ஆராய்கின்றது. இதையறியாத மூத்தோர் குழந்தைக்கு 'குறும்புச் செயல் ' அதிகம் என்று கருதுகின் றனர். குழந்தை புரியும் செயல்களால் அதற்குத் தீங்கு நேரிடாவண்ணம் அது சுறுசுறுப்பாக இருக்கும் வாய்ப்புக்களைத் தருதல் வேண்டும்; அது செயற்படவேண்டும் என்ற விருப்பத்தைச் சிதைத்தல் கூடாது. குழந்தையின் வயதிற்கும் ஆற்றலுக்கும் ஏற்றவாறு எளிதில் இயக்கக் கூடிய பொருள்கள் அதற்குக் கிடைக்கச் செய்வது மூத்தோர் கடமையாகும.

  • இவ்விடத்தில் பிள்ளைத் தமிழ் இலக்கிய நூலார் குறிப்பிடும் பருவ நிலைகளையும்

உலாப் பிரபந்த நாலார் குறிப்பிடும் ஏழுவகைப் பருவ மாதர்களின் பருவ எல்லைகளை யும் ஒப்பிட்டுச் சிந்தித்து மகிழ்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/125&oldid=777754" இலிருந்து மீள்விக்கப்பட்டது