பக்கம்:கல்வி உளவியல்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 கல்வி உளவியல் எட்டாம் ஆண்டு அவாவுள்ள ஆண்டாகும். உலகமெய்ப்பொருளில் விருப்பம் உண்டாகின்றது. கற்பதில் ஆர்வம் எழுகின்றது. சிறுவன் உள்ளதை உள்ளபடி அறிய விழைகின்றன். எண்ணுவதற்குக் கற்றுக் கொள்ளுகின்றன். கூட்டலும் கழித்தலும் அவனுக்கு விளங்குகின்றன. காலம் சொல்வான் ; ஒரு திங்கள் கூடச் சொல்வான். ஒவ்வொரு இடங் களுக்குச் சென்று பொறுப்பெடுத்துப் பொருள் வாங்கும் திறன் இவ்வயதி லிருந்து பெருகுகின்றது. தனக்கு இடும் பணிகளுக்கு மறுப்புக் கூறு கின்றன். ஆண் பெண் வேற்றுமையைப்பற்றிய ஆராய்ச்சியும், குழந்தை கள் எவ்வாறு வளருகின்றன என்ற வினவும் அவனது உண்மை உணரும் அவாவினைக் காட்டுகின்றன. மூத்தோர்கள் அவன் விடுக்கும் வினுக் களுக்கு உண்மையான விடையளிக்கவேண்டும். இதற்கு முன்னர் கவர்ச்சியுற்றதாக இருந்த பாவனை உலகமும் மகிழ்ச்சியளித்த வனதேவதைக் கதைகளும் இப்பொழுது மகிழ்ச்சி தருவ தில்லை. இப்பொழுது அவற்றைக் கூறினல் அது உண்மையா ?” என்று வினவுகின்றன்; சிந்தனையாற்றலும் நினைவும் ஓங்குகின்றன. பயன்படும் பொருள்களைச் செய்வதில் துடிப்புக் காணப்படுகின்றது. தக்களி, இராட்டை, கத்தரிக்கோல், மண்வெட்டி, இரம்பம்போன்ற கருவி களைக் கையாள விரும்புகிருன். கட்டுக்கம், திரட்டுக்கம்,* பின் பற்றல்84 போன்றவை சிறந்து விளங்குகின்றன. காரண காரியத் தொடர்பை அறிய விரும்புகின்றன். கவனிக்கும் ஆற்றல் அதிகமாகின் தது; அதிக நேரம் ஒரு பொருளைக் கவனிக்கின்றன். பின் பிள்ளைப் பருவம் (8-12) வயது இப் பருவம் கிட்டத்தட்ட மாருத நிலையினையுடையது. உடல் வளர்ச்சியில் வேகம் குறைகின்றது. பல் வரிசைகள் திருந்துகின்றன. குளித்தல், தலைவாருதல் போன்ற உடல் தேவைகளுக்கு அதிகக் கவனம் தரப்பெறுகின்றது. பல்வேறு விளையாட்டுக்கள் விளையாடி பலதிறச் செயல்கள் புரிவதால் நல்ல ஓய்வும் தூக்கமும் இன்றியமையாதவை. அபாயத்தை அசட்டைபண்ணுவதால் அடிக்கடி காயப்படுகின்றன். இப் பருவத்தில் மூளைவளரவேண்டிய அளவுக்கு வளர்ந்து விடுகிறது. உடலும் நன்கு வளர்ச்சியுற்று எதையும் பொறுக்கும் ஆற்றல் கைவரப் பெறுகின்றது. நரம்பு இணைப்புக்கள் நன்கு ஏற்பட்டு, தசைகளில் ஒத்து இயங்குதல் உண்டாகி, எலும்புகளும் வலிவைப் பெறுகின்றன. செரிக் 62 &llG&aiib - instinct of construction. 8 8 £lJtlG&aiib - instinct, of collection. 84% siruppé - imitation.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/129&oldid=777763" இலிருந்து மீள்விக்கப்பட்டது