பக்கம்:கல்வி உளவியல்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தைகளின் வளர்ச்சியும் துலக்கமும் #09. வரைக்காட்டி அவரைப் பின்பற்ற வேண்டும் என்று வற்புறுத்துதல் பெருந்தவறு. இதில் ஆசிரியர்கள் வற்புறுத்தும் அளவுக்குக் கவனம் செலுத்தலாகாது. செயலாலும் சிந்தனையாலும் மக்கட்கும் உலகிற்கும் பெருந்தொண்டாற்றியவர்களின் பெயர்களைக் குறிப்பிடலாம்; அவர் களின் வாழ்க்கை வாலாறுகளைப்பற்றிய நூல்களைப் படிக்கும் வாய்ப்புக் களை ஏற்படுத்தலாம்; சில நிகழ்ச்சிகளை நாடகங்களாக எழுதி நடிக்கவும். தூண்டலாம். குமரப் பருவம் (12-18) வயது முன் குமரப் பருவமும் பின் குமரப் பருவமும் சேர்ந்தே ஆராயப் பெறுகின்றது. பிள்ளைப் பருவத்திற்கும் முழு வளர்ச்சி பெற்ற முதிர்ந்த பருவத்திற்கும் இடைப்பட்ட பருவமே குமரப் பருவம் என்பது. இப் பருவத்தின் தொடக்கத்தையும் முடிவையும் அடையாளங் காட்டித் திட்ட மாகச் சுட்டிக் கூறுவது இயலாது. இப் பருவமே பெற்றேர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தலைவலியைத் தருவது. அவர்கள் மாளுக்கர்களைப் பற்றிய, அவர்கள் தரும் பல பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டியவர்களா கின்றனர். உடல் வளர்ச்சியும் திறன்களும் : இப் பருவத்தில் விரைவான உடல் வளர்ச்சி தோன்றுகின்றது. உயரமும், எடையும் உச்சநிலையை அடைகின்றன. தசைகள் வளர்கின்றன. உடல் உறுப்பு மாறுபாடுகள் 12 வயதிலிருந்து 14 வயதிற்குள் தொடங்குகின்றன. இப் பருவத் தொடக்கத்தில் சிறுவனுடைய உடலுறுப்புக்களின் அமைப்புக்களும் அவற்றின் தொழில்களும் நன்கு ஒழுங்குபடுகின்றன. உடலுறுப்புக்கள் பலவும் தம்மளவில் பொருத்தமுற்றுத் தசைவலிமையையும் வேலைசெய் யும் திறமையையும் பெறுகின்றன. முதிர்ச்சி பெற்றவனுடைய உயரத் தில் பத்தில் ஒன்பது பங்கு உயரமும், மூன்றில் இரண்டு பங்கு எடையும் பதினரும் வயதில் காணப்பெறுகின்றன. எலும்புகள் நீள்கின்றன; மார்புக்கூடு விரிகின்றது. இதயம், நுரையீரல் போன்ற அகவுறுப்புக்கள் வளர்கின்றன. மிகுந்த விரைவில் உடல் வளர்ச்சி ஏற்படுவதால், பல உறுப்புக்களும் ஒன்றுபட்டுச்செயற்படுவதில் தடுமாற்றம் ஏற்படுகின்றது; இளைஞனுடைய செயல்களும் சற்றுத் தாறுமாருகக் காணப்பெறலாம். காலப்போக்கில்தான் செயல்கள் ஒழுங்குபட்டுத் திறமையாகவும் செம் மையாகவும் அமையும். ஆண் பிள்ளைகளின் குரல் ஒடிந்து மெல்லிய குரல் வலிய குரலாக மாறுகின்றது; இளைஞன் மெல்லவோ, உரக்கவோ, இனிமையாகவோ பேசஇயலவில்லையென்று நினைக்கின்றன்.எடையிலோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/132&oldid=777772" இலிருந்து மீள்விக்கப்பட்டது