பக்கம்:கல்வி உளவியல்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 கல்வி உளவியல் டொன்று மோதும் இயல்பிலும் அளவிலும் இவை குழந்தையுணர்ச்சி களினின்றும் வேறுபட்டவை. இக் குழப்பமான காலத்தில் பல்வேறு தூண்டல்களால் ஏற்படும் எண்ணங்களையும் செயல்களையும் மாற்றும் உணர்ச்சி நிலை உறுதியில்லாதது. இளைஞன் ஒருசமயம் தன்னைக்கண்டு மனநிறைவோடு மகிழ்கின்ருன் ; மறுசமயம் தீராத் துயரத்தில் மூழ்கிய வளுய்க் காணப்பெறுகின்றன். ஒருசமயம் வீண்பெருமை பாராட்டுகிருன்; உடனே எளிதில் மனத்தளர்ச்சி பெறுகின்றன். ஒரு கணம் அதிகாரப் பிரியனுகக் காணப்பெறுகின்ருன் , அடுத்த கணம் மிகத்தாழ்மையுடைய வகைக் காணப்பெறுகின்றன். ஒருசமயம் ஆக்கிரமிக்கும் இயல்பு மீதுர்ந்து கிற்கின்றது; அடுத்து கோழைத் தன்மை மேலோங்குகின்றது. ஒரு நிமிடம் உல்லாசமாகவும், பிறகு ஊக்கமற்றவளுகவும் ஆகின்றன். ஒருசமயம் விடுதலையுணர்ச்சி மேலோங்கி நிற்கின்றது ; அடுத்து முற்றிலும் பிறரைச் சார்ந்தவளுகக் காண்கின்றன். ஒரு சமயம் பிறர் கலத்தைப்போற்றுகின் ருன்; மறுசமயம், தன்னலம் பேணுகின்றன். மொத்தத்தில் புதிதாய்த் தோன்றும் உணர்ச்சிகளையும் உள்துடிப்புக்களையும் அடக்கிப் பொருத்தமுற முடியவில்லை. இந் நிலைமை பல்வேறு வழிகளில் வெளியாகின்றது. இளைஞன் எவ்விதக் கட்டுப்பாட்டையும் மீற விரும்பும் புரட்சிக்காரளுகத் தோன்றுகின்ருன். இப் பருவத்தில் இனப்பெருக்க உறுப்புக்களின் தொழில் விரிவடை கின்றது. காதல் உணர்ச்சி பிறக்கின்றது. அழகிலும் வனப்பிலும் கவர்ச் சியிலும் இப் பருவத்தினர் ஈடுபடுகின்றனர். தகுந்த சூழ்நிலையில் தக்க கண்காணிப்புடன் இளைஞர்கள் பிறபாலாரோடு இணங்குவது ஓரளவு கன்மை பயக்கும். ஒருவரோடு ஒருவர் அளவளாவுதலால் பல நற்பயன் களே அடைகின்றனர். மகளிர் கிதானத்தையும் தன்னம்பிக்கையையும் பெருந்தன்மையையும் அடைகின்றனர். முதிர்ந்தவர் பெண்களிடம் காட்டும் மரியாதையையும் நன்னயத்தையும் காளையர் இப் பருவத்தில் காண்பிக்கின்றனர். தங்களுடைய தோற்றத்தையும் நடையையும் பெண்கள் மனத்தில் பதியச் செய்ய முயல்கின்றனர். இரு பாலாரும் தமக்குள் சரியான, பெருந்தன்மையான, ஏற்ற மனுேபாவங்களைக் காட்டிக் கொள்ளுகின்றனர். இந் நிலையில் பால்கல்வி கற்பித்தல் இன்றியமை யாதது என்பர் அறிஞர். உடல் மாற்றங்களுக்கேற்பப் பொருத்தப்பாடு : இப் பருவத்தில் உடலில் ஏற்படும் மாறுபாடுகள் வியக்கத்தக்கவை. இளைஞன் தன் உடல் வளர்ச்சி மாற்றத்தைத் தானே உணர்ந்தவனுகி, உடல் வலிமையை

  • 9 us $33,658 - sex education.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/135&oldid=777781" இலிருந்து மீள்விக்கப்பட்டது