பக்கம்:கல்வி உளவியல்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 14 கல்வி உளவியல் ளையும் நினைவிற்குக் கொண்டு வரவேண்டும். கீழ்க்கண்ட குறிப்புக்கள் பயன்தருபவை. (1) உடலுக்கோ அல்லது உளத்திற்கோ மிதமிஞ்சிய வேலைதரக் கூடாது. நல்ல உணவு, போதுமான அளவு ஓய்வு, தூக்கம் இன்றி யமையாதவை. இப் பருவத்தில் சிறுவர்களும் சிறுமியரும் மிதமிஞ்சிய அளவுக்கு விளையாட்டுக்களில் ஈடுபடுதலாகாது. அளவுடன் செயல் களில் ஈடுபடவேண்டும். (2) களைப்பையும் மடிமையையும் பாகுபடுத்தி அறிதல் அவசியம். விரைந்து வளரும் குமரன் அதிகநேரம் அறிவு வேலையில் ஈடுபடுவது சாத்தியமானதன்று. வீட்டு வேலையைத் தருவதில் ஆசிரியர் இக் கூறினை நினைவில் வைத்துத் தருதல் வேண்டும். (3) இளைஞனின் சமூகவளர்ச்சிக்கும் அறவாழ்க்கை வளர்ச்சிக்கும் இப் பருவம் மிகவும் முக்கியமானது. இப் பருவத்தினர் அடையும் புதிய கிலைக்குத் தக்கமதிப்பு தருதல் வேண்டும். இப் பருவத்தில் நுழையுங்கால் பாலர்களாக இருந்தவர்கள் இப் பருவத்தைக் கடக்குங்கால் பாலரைப் பெற்றெடுக்கும் ஆற்றலுடையவர்களாகின்றனர். இப் பருவத்தினரிடையே யுள்ள தவருன கூச்சத்தை அகற்றிப் பால் கல்வியை அஞ்சாமல் புகட்ட வேண்டுமென்பது தற்காலக் கொள்கை. இல்லாவிடில் தவருண எண்ணங் களையும் பழக்கங்களையும் தகாத வழிகளில் இளைஞர்கள் பெற முயலுவார் கள். பால்பற்றிய செய்திகளை மூடிவைப்பதாலும் மழுப்புவதாலும் பயனில்லை. ஆளுல், பாலறிவுடன் தன்னடக்கமும் அவசியம் என் பது நமக்குத் தெரியாமல் இல்லை. தன்னடக்கமில்லாவிடில் பால்கல்வி அபாயகரமானது. (4) இப் பருவத்தில் பொங்கி எழும் இயல்பூக்கங்களையும் உள்ளக் கிளர்ச்சிகளையும் தக்க முறையில் தூய்மை செய்ய வேண்டும். இலக்கி யக்கழகங்கள், நுண்கலைக் கழகங்கள், சாரணர் இயக்கம், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம். சமூகத்தொண்டுக் கழகங்கள், பள்ளி விழாக்கள் போன்றவை இதற்குத் தக்க வாய்ப்புக்களை நல்கும். இப் பருவத்தில் இசை, ஓவியம், வண்ணவேலை, கற்பனை வன்மை, தையல், இலக்கியம், சேவை போன்ற ஆக்கவேலைகளில் இளைஞர்களை ஈடுபடுத்தி அவர்களின் ஆற்றலை உயர்மடைமாற்றம்” செய்யலாம். சிறுவர்களை மட்டக் தட்டிக் குறைகூருமல், அவர்கள் பின் கின்று ஏற்ற அறிவுரையும் வாய்ப்புக்களும் 90;sirol-3&to - Self-control. 91.உயர் மடைமாற்றம் - sublimation.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/137&oldid=777786" இலிருந்து மீள்விக்கப்பட்டது