பக்கம்:கல்வி உளவியல்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 கல்வி உளவியல் இது நெடுக்காக உற்று நோக்கல் என வழங்கப் பெறும். மற்றென்று : ஒரே வயதுடைய குழந்தைகளின் பொதுப் பண்புகளை உணரலாம். ஒரு குறிப்பிட்ட வயதுடைய குழந்தைகளுக்குத் தெரியாதவை, தெரிந்தவை, அவர்கள் விரும்பும் பாடங்கள், வெறுக்கும் பாடங்கள், அவர்கள் மேற். கொள்ளும் பொழுது போக்குச் செயல்கள், அவர்களிடம் உள்ளக் கிளர்ச்சிகள் தோன்றும் முறை, அவர்கள் தீட்டும் ஓவிய வகைகள், விடுக்கும் விளுக்களின் வகை முதலியவற்றைக் கவனித்துக் குறிப்புக்கள் எழுதி வைத்தல். இது குறுக்காக உற்று நோக்கும் முறை என வழங்கப் பெறும். - கீழே காண்கிறபடி அச்சிட்ட தாளில் குழந்தைகளை உற்று நோக்குவதால் அறிந்த தகவல்களைக் குறித்துக் குறிப்புக்கள் எழுதி $ojö56}ssify, தனிக் குழந்தையை உற்றுநோக்கல் குழந்தையின் பெயர்.................. 6aتتام للالi • • • • • • கவனித்ததேதி...... பள்ளியின் பெயர் ................... பயிலும் வகுப்பு................ 1. குழந்தையின் குடும்ப நிலை 1. குடும்ப உறுப்பினரின் தொகை: (a) தங்தையின் பெயர் : (b) தொழில் : (c) வருமானம் : (d) தாயின் பெயர் : (e) தொழில்: (f) வருமானம் : (g) குடும்பத்தின் பொதுப் பொருளாதார நிலை : (b) வாழ்க்கைத்திறன் : (i) மூத்த சகோதரர்கள் (பெயர், வயது) (i) மூத்த சகோதரிகள் (பெயர், வயது) (k) இளைய சகோதரர்கள் (பெயர், வயது) (1) இளைய சகோதரிகள் (பெயர், வயது) குறிப்பு : திருமணம் ஆனவர்களா, ஆகாதவர்களா என்ற விஷ் ரங்களையும் ஒவ்வொருவருக்கும் குறிப்பிடுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/139&oldid=777790" இலிருந்து மீள்விக்கப்பட்டது