பக்கம்:கல்வி உளவியல்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல்முகம் xvii மூன்ருவது அத்தியாயம் ஆசிரியர்களின் பல்வேறு பிரச்சினைகளைச் சற்று விரிவாக விளக்குகின்றது. இப்புத்தகத்தில், இதுகாறும் வெளிவந்துள்ள கலைச்சொற்களே தேர்ந்தெடுத்துக் கையாளப்பெற்றுள்ளன ; சில புதிய கலைச்சொற்கள் ஆக்கப்பெற்றும் மேற்கொள்ளப்பெற்றுள்ளன. இவை ஆங்காங்கு ஒவ் வொரு பக்கங்களின் அடியில் குறிப்பிடப்பெற்றிருப்பதுடன் புத்தகத்தின் இறுதியிலும் பின்னிணைப்பாகத் தொகுத்தும் கூறப் பெற்றுள்ளன. இவ் விணைப்பைத் தவிர, இப்புத்தகம் எழுதத் துணையாக இருந்த நூல்களின் பெயர்கள், பொருட் குறிப்பு:அகராதி ஆகியவையும் இணைப்புக்களாக அமைந்துள்ளன. புத்தகத்தைப் படிப்போருக்கு அவரவர் விரும்பும் வண்ண்ம் இவை துணையாக இருக்கும். இப்புத்தகம் உருவாகும்பொழுது பிரதி சரியாக அமைவதற்கும் பிறவற்றிற்கும் துணையாக இருந்தவர் என் கெழுதகை நண்பர் உளவியல் பேராசிரியர், திரு. வை. நா. சுப்பிரமணியம். நான் அழகப்பா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவளுகப் பணியாற்றியபொழுது இந்நூலே எழுதினேன். எழுதுங்கால் எனக்கு ஏற்பட்ட பல்வேறு ஐயங் களே அவ்வப்பொழுது அகற்றியும், அடிக்கடி மேற்கோள்நூல்களைக் காட்டி ஆற்றுப்படுத் தியும், இன்னும் பல்லாற்ருனும் துணை செய்தார் பேராசிரியர் சுப்பிரமணியம். புத்தகம் எழுதி முடிந்ததும் பொறுமையாக இருந்து பிரதி முழுவதையும் யான் படிக்கக் கேட்டுப் பல திருத்தங்களைக் கூறினர். உளவியல் துறையில் ஆழ்ந்த அறிவும் ஆராய்ச்சித் திறனும் அவற்றிற்கு மேலாக நல்ல அனுபவமும் கிறைந்த இவர் இத்துணை யளவு உதவியதுடன் இந்நூலுக்கு ஓர் அரிய முன்னுரையையும் வழங்கி இதனைச் சிறப்பித்திருக்கின்ருர். இவருக்கு என் உளங்கனிந்த நன்றி. உயர் திரு. கோ. ர. தாமோதரன் அவர்களை அறியாத தமிழ்மக்களே இரார். இன்று இந்தியாவிலுள்ள தொழில்துறை மேதைகளில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களுள் ஒருவர்; தமிழ்நாட்டிற்குக் கோவை மாவட்டம் தந்த அறிஞர்; பல கல்விக் கூடங்களைத் தோன்றுவித்த உயர்ந்த செல்வர் குடும்பத்தில்தோன்றி உயர்கல்வி பெற்று, பல்லாண்டுகள் வெளிநாடுகளிலும் பயின்று பொறியியல் துறையில் உயர்பட்டங்கள் பெற்றுச் சிறந்த அறிஞராகி, தம் குடும்பத்திற்குச் சொந்தமான பூ. சா. கோ. பொறியியற் கல்லூரியின் முதல்வராயிருந்துகொண்டு தமிழ்நாட்டு இளைஞர்கட்குப் பொறியியற் கல்வியை ஊட்டிவரும் செம்மல். கிட்டத் தட்ட அந்தப் பொறியியற் கல்லூரியைத் தோன்றுவித்தவரும் இப்பெரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/14&oldid=777792" இலிருந்து மீள்விக்கப்பட்டது