பக்கம்:கல்வி உளவியல்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 கல்வி உளவியல் யும் ஆற்றல்களையும் அவ்வவற்றின் எல்லேக்குள் சிறந்த முறையில் வளர் வதற்குச் சாதகமான வாய்ப்புக்கள் உள்ள சூழ்நிலையை உண்டாக்குவதில் ஆசிரியர் எப்பொழுதும் துணைசெய்யலாம் என்பதை உண்ரவேண்டும். தக்க சூழ்நிலையை அமைத்துக் கொண்டதால் அண்மைக்காலத்தில் ஜப்பான் வியத்தகு முறையில் புத்துயிர் பெற்றுப் பொலிவதை உலக வரலாறு நமக்கு எடுத்துரைக்கின்றது. வேறுசிலர் குடிவழியை அறவே புறக்கணித்து, கல்வி, பயிற்சி, சூழ் நிலை முதலிய சாதகமான வாய்ப்புக்களால் மனிதத் திறமைக்குள்ளடங் கிய அனைத்தையுமே எய்துவிக்கலாம் என்று வரம்பிகந்து கருதுகின்றனர். அவர்கள் இன்பத்தையே எதிர்நோக்கும் இறுமாந்த மனப்பான்மையால் தவறிழைத்து பெறமுடியாததைப் பெறமுயல்வதில் ஏராளமான முயற்சி, காலம், பணம் ஆகியவற்றைப் பாழ்படுத்துகின்றனர். தம்முடைய ஆற். றலுக்கும் திறனுக்கும் அப்பாற்பட்ட பொறியியற் கல்வியையும் மருத் துவக் கல்வியையும் மேற்கொண்டு-பல்வேறு செல்வாக்குகளினல் அக் கல்லூரிகளில் நுழையவும் இடம்பெற்று-திண்டாடுவதை நாம் காணுமல் இல்லை. எவ்வளவு சிறந்த முறையில் கல்வியைப் புகட்டினலும், பயிற்சி யளித்தாலும், தக்க சூழ்நிலையை உண்டாக்கிலுைம், குடிவழியால் கை வரப்பெருத கவர்ச்சிகளையும் திறன்களையும் உண்டாக்க முடியாது. ஓவியம் தீட்டும் திறனே இசையில் ஈடுபடும் திறனே வாய்க்கப் பெருத தனியாள் என்னதான் முயன்ருலும், அக் கலைகளில் சிறந்த நிபுணர்களா லும் அக் கலைப்புலமையை அவனிடம் உண்டாக்க முடியாது ; சிலரிடம் தம்முடைய செல்வாக்கால் கணிசமான அளவுகூட பலனஉண்டாக்க முடிவதில்லை. இது கழுதையைக்கட்டி ஓமம் வளர்ப்பது போன்ற செயலாக முடியும். கருப்பு காயை வெள்ளை நாயாக்க முடியாது என் பதை இராயருக்கு எடுத்துக்காட்டத் தெளுலிராமன் மேற்கொண்ட சோதனை ஈண்டு நினைவு கூர்தற்பாலது. ஆளுல், கல்வியால் ஏற்கெனவே அமைந்து கிடக்கும் திறனைத் தேர்ந்தெடுத்து, அதனைத் தூண்டி வளர்க்க முடியும் , அது முழுவளர்ச்சியையும் பெறுவதற்குப் பாதகமான வாய்ப்புக் கள் யாவற்றையும் களைந்து சாதகமான வாய்ப்புக்கள் அனைத்தையும் தந்து துலக்கமடையச் செய்யலாம். இந்த உலகில் ஒவ்வொரு வகைத் திறனுக்கும் ஒவ்வொரு நிலையிலுள்ள திறனுக்கும் ஓர் இடம் உண்டு. அறிவுடைய கல்விமுறையால் அவற்றை இளமையிலே ஆராய்ந்து அவை சிறந்த முறையில் துலக்கமுறுவதற்குரிய எல்லா வாய்ப்புக்களையும் அளித்தல் ஆட்சியாளரின் கடமை; அதற்கு இணைந்து துணைகின்று பணியாற்றுவது ஆசிரியரின் பொறுப்பு. ஆளுமை வளர்ச்சியே நாட்டு வளர்ச்சி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/151&oldid=777819" இலிருந்து மீள்விக்கப்பட்டது