பக்கம்:கல்வி உளவியல்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிவழியும் சூழ்நிலையும் 137 டிருக்கும் மிக நுண்ணிய உறுப்புக்கள் உள்ளன. அவற்றை உயிர்மின்னி கள் என வழங்குவர். உயிர்மின்னிகளின் தொகுதியாலேயே நிறக்கோல் கள் அமைந்திருக்கின்றன. உயர்ந்த நுண்ணணுப் பெருக்கியாலும்' உயிர்மின்னியைத் தனியாகக் காண்பது அரிது. ஆற்றல்மிக்க நுண் ண்ணுப் பெருக்கியில்ை ஒரு நிறக்கோலை ஆராய்ந்ததில் அது கயிற்றில் கோக்கப்பெற்ற உருண்டை மணிகள்போல் காணப்பெறுகின்றது : முக் கியமாக, அது ஒரு திட்டமான ஒழுங்கில் அமைக்கப்பெற்ற உயிர்மின்னி களின் கோவையே. மானிட உயிர்மின்னிகள் கிட்டத்தட்ட ஆயிரத் திற்கு மேற்பட்டவை; அவை 48 கிறக்கோல்களிலும் சமமின்றி வினி யோகிக்கப்பெற்றுள்ளன. இணையாக உள்ள கிறக்கோல்களின் ஓர் இணையிலுள்ள ஒரு நிறக் கோலின் ஓர் உயிர்மின்னி அந்த இணையிலுள்ள மற்ருெரு நிறக்கோலின் ஓர் உயிர் மின்னியுடன் இணைந்திருக்கின்றது. இந்த உயிர்மின்னிகள் தாம் ஒரேமாதிரியான முறையில் அல்லது மாறுபட்ட முறையில் ஒரே செயலைப் புரிகின்றன. ஓர் இணையிலுள்ள உயிர்மின்னிகள் தம்செயலில் ஒரேமாதிரியான முறையில் செயற்பட்டால், அவற்ருல் ஆக்கப்பெறும் சிறப்பியல்பு: தலை காட்டும். இவ்வாறு காட்டுவதற்கு வேறு இணை உயி ரணுக்களின் தலையீடு" இல்லாதிருக்க வேண்டும். அவை மாறுபட்ட முறையில் செயற்பட்டால் இந்த இரண்டு உயிர்மின்னிகளின் வேறுபட்ட செல்வாக்குகள் ஒன்ருக இணைந்து இடைப்பட்ட சிறப்பியல்பினை விளை விக்கலாம் ; அல்லது ஓர் உயிர்மின்னி பிறிதொன்றின் செல்வாக்கை மறைத்தும் விடலாம். வேருெரு உயிர் மின்னியின் முன்னிலையில், வன் மையான உயிர்மின்னியொன்று ஒரு சிறப்பியல்பினை உண்டாக்குமே யால்ை அது ஓங்கிநிற்கின்றதாகப் பேசப்பெறும்; மறைந்த உயிரணு பின்தங்கி நிற்கின்றதாகக்" கூறப்பெறும். இவை பற்றிய முழுவிவரங் களை உயிர்நூல்களில் கண்டு கொள்க. - இனப்பெருக்க உயிரணுக்கள் உண்டாகும்பொழுது தாயினிடமுள்ள முட்டையில் 24 கிறக்கோல்களும் (12 இணைகள்) தங்தையிடமுள்ள விக் தணுவில் 24 கிறக்கோல்களும் (12. இணைகள்) அமைகின்றன என்று மேலே கண்டோம். ஒரு தனியாளிடமுள்ள முட்டைகள் (அல்லது விந் தணுக்கள்) நிறக்கோல்களின் பல்வேறுவிதமான இணைப்புக்களைப் பெறு கின்றன. 48 கிறக்கோல்களில் எந்த 24 நிறக்கோல்கள் ஒரு குறிப்பிட்ட _ 8 9 1518:orenargylü Gu@;&& - microscope, 4 o á pääuäu-characteristic. **śāous(S - interference. **śrīlā ājāpā) - dominant. 4.sosråtågå iálbpso - recessive.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/160&oldid=777837" இலிருந்து மீள்விக்கப்பட்டது