பக்கம்:கல்வி உளவியல்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 கல்வி உளவியல் மாறுவதும், அவையே பல்வேறு உறுப்புக்களாக மாறிவளர்வதுமே கம்மை வியப்புக்கடலில் ஆழ்த்துகின்றன. எல்லா உயிரணுக்களும் கரு படம் 24 : மானிட இளஞ்சூல் தாயின் கருப்பையில் ஒட்டிக் கொண்டி ருப்பதெக் காட்டுவது வுற்ற முட்டையினின்றே தோன்றியவையாதலின், அவற்றின் குடிவழி யில் யாதொரு வேற்றுமையும் இல்லை. ஆகவே, சூழ்நிலையைக் கொண்டே இதனை விளக்க முயல வேண்டும். சிறப்படையாத குழவி யின் சூழ்கிலேயாகிய தாயின் கருப்பை பாதுகாக்கப்பெற்ற ஒரு சூழ்நிலை ; வெளியுலகின் தட்பமும் வெப்பமும், தள்ளலும் இழுத்தலும், ஒளியும் மணமும், பிறவிசைகளும் அங்கு இல்லை. அவ்விடம் வழுவழுப்பாகவும் ஒரே மாதிரியாகவும் உள்ளது. அது வளரும் உயிரியின் எல்லா உயிரணுக் களுக்கும் ஒரே சூழ்நிலையைத்தான் பெற்றுள்ளன. அப்படியாளுல் உயிரணுக்கள் பலவேறு வகையான உயிரணுக்களாக மாறுவதற்குக் காரணம் என்ன?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/165&oldid=777846" இலிருந்து மீள்விக்கப்பட்டது