பக்கம்:கல்வி உளவியல்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிவழியும் சூழ்நிலையும் 143 வகைப்படுத்துதல் 62 : ஒற்றை உயிரணுவிலிருந்து பல்வேறு வகை உயிரணுக்கள் துலக்கமடைவதை வகைப்படுத்துதல்’ என்ற பெயரால் வழங்குவர். பெரும்பாலும் முதிர்ச்சி' என்பது வகைப்படுத்து தலேயாகும். ஒரே உயிரியின் எல்லா உயிரணுக்களும் ஒரே உயிர் மின் னி களைக் கொண்டும் ஒரே சூழ்நிலையிலும் இருக்கும்பொழுது வகைப்படுத்து தல் எங்ங்னம் நிகழ்கின்றது ? சூழ்நிலையைப்பற்றிய விரிந்த கருத்து இதை விளக்கத் துணை செய் கின்றது. ஓர் உயிரியினுள்ளிருக்கும் உயிரணுவின் சூழ்நிலை முழுஉயிரியின் சூழ்நிலையைப் போன்றதன்று. பிறக்காத உயிரி முழுவதற்கும் வளர்ச் சிக்கு பொதுத்தேவையாகவுள்ள உணவு, சூடு போன்றவற்றைத் தந்து பயனுள்ள சூழ்நிலையாக இருப்பது தாயின் கருப்பையாகும். ஆயினும், ஓர் உயிரியினுள்ளிருக்கும் ஏதாவது ஓர் உயிரணுவிற்கு அதைச் சுற்றி யிருக்கும் பிற உயிரணுக்களே பயனுள்ள சூழ்நிலையாக அமைகின்றன. ஒரு சிறிது வகைப்படுத்துதல் செயல் கிகழ்ந்ததும், உயிரியின் பல்வேறு பகுதிகளிலுள்ள உயிரணுக்கள் பல்வேறுபட்ட சூழல்களைப் பெறுவதுடன் பல்வேறுவித தூண்டலையும் பெறுகின்றன. சில உயிர்மின்னிகள் ஒரு வகைத் தூண்டலுக்கும், வேறு சில உயிர்மின்னிகள் வேறுவகைத் தூண்டலுக்குமாகத் துலங்குகின்றன. ஆகவே, ஒரே உயிரியின் பல்வேறு பகுதிகளிலுள்ள உயிரணுக்கள் பல்வேறுவிதமாகத் துலங்குகின்றன. கரு வுற்ற முட்டையில் ஒரு சிறிய அளவில் வகைப்படுத்துதல் தொடங்கி படிப்படியாக வளர்கின்றது. மிகத் தொடக்கநிலையில் மூன்று அடுக்குகளில் (புரைகளில்) உயிர ணுக்கள் அமைகின்றன. அவை அமைப்பிலும் உருவத்திலும் பாகுபாடு அடைகின்றன. வெளிப்புரையிலிருந்து தோலும், உட்புரையிலிருந்து உள்ளுறுப்புக்களும், நடுப்புரையிலிருந்து தசைகளும் எலும்புகளும் துலக்க முறுகின்றன. இந்த மூன்று புரைகளும் ஒன்ருேடொன்று இடைவினை யியற்றி ஒன்றையொன்று தூண்டி உடலின் பல்வேறு பகுதிகளை உண் டாக்குவதில் ஒன்ருேடொன்று சேர்கின்றன. இந்தச் செயல்கள் யாவும் மிகச் சிக்கலானவை ; கருவளர்ச்சியியல் நிபுணர்கள்" அதை முழுவதும் புரிந்து கொண்டுவிட்டதாக ஒப்புக்கொள்வதில்லை. ஆளுல் நாம், ஒர் உயிரிக்குள்ளேயே இடைவினையியற்றும் பகுதிகளே வகைப் படுத்துதலின் அறுதியிடும் கூருக அமைகின்றது என்று கூறலாம். இவ்வாறு இடைவினையியற்றுவதால் உயிரணுக்களில் சில நரம்பு அணுக் saasalu@ssss - differentiation. To spēlēs - maturation. 8 க்கருவளர்ச்சியியல் கிபுணர்கள் embryologists.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/166&oldid=777848" இலிருந்து மீள்விக்கப்பட்டது