பக்கம்:கல்வி உளவியல்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிவழியும் சூழ்நிலையும் 145 இளஞ்சூல் உயிரணுக்கள் ; ஆயினும், அவை விரைவில் பிரிந்து கரம் பணுக்களின் பண்புகளைக்கொண்ட உயிரணுக்களாக மாறுகின்றன. துடிப்புக்களைக் கடத்தக்கூடிய காப்பவிழுதுகளும் ஈரப்பக் கிளைகளும் அவற்றில் தோன்றுகின்றன. புகுவாய்களும் இயங்குவாய்களும் காணப்பெறுகின்றன. பிறகு புகுவாய்களும் நரம்பு அமைப்புக்களும் இயங்குவாய்களும் தொடர்பு பெறுகின்றன. சில கரப்ப அணுக்களிலுள்ள சில கரப்பவிழுதுகள் தசைகளையும் புலன் உறுப்புக்களையும் அடைந்து பிறப்புநேரிடுவதற்கு நீண்ட நாட்களுக்கு முன்னரே துடிப்புக்களைக் கடத் தத் தொடங்கி விடுகின்றன. தண்டுவட மையத்தில் கேராகவோ இயைபு நரம்பு நுண்மங்கள் மூலமாகவோ கூடல்வாய்கள்" ஏற்படுகின்றன. தண்டு வடத்தினுடையவும் மூளைத்தண்டினுடையவுமான கீழ்நிலை மையங் கள் பிறப்பு 19 ஏற்படுவதற்கு முன்னே செயற்படத் தொடங்குகின்றன; பிறப்பு எய்தியவுடன் செயற்படத் தயாராக இருக்கின்றன. மூளை மூன்று குமிழ்கள்போல் தோன்றிப் பாகுபாடு அடைகின்றது. தொடக்கத்தில் மூளையின் மேற்பரப்பு வழுவழுப்பாக இருக்கும். நாள ட்ைவில் பல மடிப்புக்கள் தோன்றி அவை புறணியாக' அமைகின்றன. நரம்பிழைகள் வளர்ந்து கூடல்வாய்கள் ஏற்பட்டு மூளையின் இயைபு மையங்கள் ஆகின்றன. புறணியின் சில பகுதிகள் பாகுபாடுபெற்று சில பார்வைச் செய்திகளையும், சில கேள்விச்க்,செய்திகளையும் ஏற்பவைகளா கின்றன. மூளையின் இயக்க எல்லையிலுள்ள உயிரணுக்களிலிருந்து இழை கள் தண்டுவடத்திற்குச் செல்லுகின்றன. மூளையின் இரண்டு அரைக் கோளங்களும் உடலின் எதிர்ப்பக்கங்களுடன் இணக்கப்பெறுகின்றன. அவை விருப்பச் செயல்கள் செல்லும் வழிகளாகும். பன்னிரண்டு இலட்சங்கோடிக்கு' மேற்பட்ட மூளைஉயிரணுக்கள் பிறக்கும்பொழுதே புறணியில் உள்ளன என்று கணக்கிட்டுள்ளனர். பிந்திய வளர்ச்சி உயிரணுக்களின் எண்ணிக்கையைப்பற்றியதன்று அது அவற்றின் நீளம், பருமன், தொடர்புபோன்ற கூறுகளைப்பற்றியது. பெருமூளையின் புறணி பிறக்கும்பொழுது மிக விரிந்துள்ளது; ஆல்ை, அதன் உள்ள மைப்பு மிக உயர்ந்த முறையில் வளர்ச்சி பெறவில்லை. பிறந்து பலவாரங் கள் வரையிலும்கூட அது செயற்படுவதில்லை. புனிற்றிளங்குழவியின் நடத்தைக்கு அது ஒருக்கால் யாதொரு தொடர்புங் கொள்ளாதிருப்பினும் இருக்கலாம்.

  • Egalugarsų versisë - connective neurones, osa.Lasarā - synapse. Toš's fia, soul uásár - lower centres. 71 Høgni - cortex, 12இலட்சங்கோடி - billion.

க.உ.10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/168&oldid=777852" இலிருந்து மீள்விக்கப்பட்டது