பக்கம்:கல்வி உளவியல்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 கல்வி உளவியல் பிறப்பதற்கு முந்திய செயல்: ; பிறக்கும் வரையிலும் தனியா ளின் வேலை, அமைக்கும் வேலையே. அவனிடம் இதயம், குருதிக் குழல் கள், புயங்கள், கால்கள், மூளை, நரம்புகள், ஏனைய அடிப்படை உறுப்புக் கள் ஆகியவற்றை ஆக்கும் வேலையே நடைபெறுகின்றது. செயற்படும் தொழிலாகிய நடத்தை சற்றுப் பொறுத்துத்தான் நிகழ்கின்றது. எனினும், பிறப்படையாத குழந்தை முற்றிலும் செயலற்றிருக்கின்றது என்பதில்லை. கருவியல் வாழ்வின் மூன்ரும் வாரத்திலேயே அவன் இதயம் துடிக்கத் தொடங்கி குருதி வட்டமும் நடைபெறுகின்றது. மூன்ருந்திங்களிலேயே அவனுடைய தசைகள் செயற்படத் தொடங்குகின்றன; உடல்' வளைந்து புயங்களும் கால்களும் அசைவு பெறுகின்றன ; இந்த அசைவுகள் பிந்திய திங்கள்களில் வன்மை அடைகின்றன. புலன் உறுப்புக்களும் அவற்றின் நரம்புகளும் மிக முன்னதாகவே துலக்கமுற்று பிறப்பெய்துவதற்கு முன்னரே செயற்படக்கூடியனவாக இருக்கின்றன. ஆயினும், பார்வைப்புலன், சுவைப்புலன், காற்றப்புலன் ஆகியவை பிறப்பதற்கு முன்னர் பலன்தரு தூண்டல்களைப் பெறுதல் அரிது. ஒலி, கருவிலுள்ள குழந்தையின் காதுகளைத் துளைக்கக்கூடும். தொடுபுலனும் தசைப்புலனும் அது அசையும்பொழுதெல்லாம் தூண்டப் பெறுகின்றன. குழந்தையின் அசைவுகளிலிருந்து மூளைத்தண்டின் கீழ்கில மையங் களும் தண்டு வடத்தின் கீழ்நிலை மையங்களும், நரம்புகளும் தசைகளும் பிறப்பதற்கு முன்னரே செயற்படுகின்றன என்பதை அறிகின்ருேம். எனவே, பிறக்குமுன் நடைபெறும் செயலால் குழந்தை ஏதாவது கற்கின்றதா என்ற வின எழுகின்றது. தசைகளின் செயலும் நரப்ப மையங்களும் தம்முடைய செயல்களால் வன்மை அடைகின்றன என்ற அளவுக்கு நாம் அனுமானிக்கலாம். பிறந்ததும் குழந்தை ஒரு புதிய சூழ்நிலையையும் வன்மையான பல தூண்டல்களையும் கொண்ட பரந்த இவ் வுலகை அடைகின்றது. பிறந்தபின் முதிர்ச்சி முன்னர் மூன்ரும் அத்தியாயத்தில் உடல்வளர்ச்சி, இயக்க வளர்ச்சி என்ற தலைப்புக்களில் கூறியவற்றையும் ஈண்டு திரும்பவும் இணைத்துப் பயின்று நினைவு கூர்தல் சாலப் பயன்தரும்.

  • 8.1%púugsbö (spíššu Glæsirée - prenatal activity. 743, Lö - trunk
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/169&oldid=777854" இலிருந்து மீள்விக்கப்பட்டது