பக்கம்:கல்வி உளவியல்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蠶蠶 நூல்.முகம் உயர் ஒளி வீசும் அருமனியாகத் திகழும் இவர்களது ஆட்சிக்காலத்தில்தான் தமிழன்னை சட்ட சபையில் அரியணை ஏறினுள். தமிழ் ஆராய்ச்சிவளர்ச்சி ஆலோசனைக் குழு"வினை நிறுவித் தமிழன்னைக்குப் புதுக் கோலம் புனைந்து புத்தணிகள் பூட்டி அரியணை ஏற்றுவிப்பதில் முனைந்து கிற்கும் இவர்களது ஆட்சிக் காலத்தில்தான் தமிழன்னை பல்கலைக் கழகக் கல்வியிலும் பாடமொழியாக அரியணை ஏறத் தகுதிபெற்று வருகின்ருள். முருகனத் தமிழ்க் கடவுள் என்பர் தமிழறிஞர்; அந்த முருகன் அருளால்தான் திரு. சுப்பிரமணியம் அவர்கள் தமிழ் நாட்டில் இன்று தேவசேன பதிபோல் தமிழ்த்தொண்டு புரிகின்ருர்களோ என்றுகூடத் தமிழ் மக்கள் கருதுவதில் பொருத்தம் உண்டு. தவிர, இவர்கள் காரைக்குடி அழகப்ப செட்டியார் கல்விஅறநிலையக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றுகின்றர்கள். அக்குழுவினரால் கண்காணிக்கப்பெற்றுவரும் அழகப்பா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் கடந்த பத்தாண்டுகள் சிறி யேன் பணியாற்றியபொழுது இவர்களது சிறப்பை கன்ருகத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. இத்தகைய பேரறிஞர்பால் சிறியேன் கொண்டுள்ள பேரன் பிற்கும் பெருமதிப்புக்கும் அறிகுறியாக இவர்கட்கு இந்நூலைச் சமர்ப்பிக்கின்றேன். இவர்கள் ஆசியால் இந்நூல் தமிழ்கூறு கல்லுலகத்தில் பெருமிதத்துடன் உலவும் என்பது என்திடமான கம்பிக்கை, எனக்கு இயல்பாகவுள்ள பலவகையான குறைகளால் இப்புத்தகத்தில் பலவித வழுக்கள் நேரிட்டிருத்தல் கூடும். அன்பர்கள் அவற்றைப் பொறுத்தருள்வார்களாக. புத்தகத்தை ஊன்றிப் படித்து மேற்படி குறைபாடுகளைத் தெரிவிப்பார்களாயின் அவர்கட்கு மிகவும் கடப்பா டுடையேன் ; அவற்றை அடுத்த பதிப்பில் திருத்திக்கொள்வேன் தமிழன்னையின் புதுவாழ்வில் பணியாற்றவும் இப்புத்தகத்தை எழுதி வெளியிடவும் சிறியேன் மேற்கொண்ட முயற்சியை நிறைவேற்றிவைத்த எல்லாம் வல்ல திருவருளே மனம் மெய் மொழிகளால் எண்ணி இறைஞ்சி வாழ்த்துகின்றேன். ' குற்றம் களைந்து குறையெய்து வாசித்தல் கற்றறிந்த மாந்தர் கடன்.” இங்ங்ணம், ந. சுப்பு ரெட்டியார் கழகம், திருப்பதி. திருவேங்கடவன் יש"( í 2- ? - Í 96 1 .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/17&oldid=777856" இலிருந்து மீள்விக்கப்பட்டது