பக்கம்:கல்வி உளவியல்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 கல்வி உளவியல் 7-8 திங்களில் அசையாது உட்காருகின்றது; கிட்டத்தட்ட 10-ஆம் திங் களில் ஒருபொருளின் ஆதரவிலும், 12-ஆம் திங்களில் ஆதரவின்றியும் கிற்கின்றது. 10-11-ஆம் திங்கள் தொடங்கி ஆதரவுடனும், 14ஆம் திங்களில் ஆதரவின்றித் தனியாகவும் கடக்கின்றது. நடப்பதில் முதலில் காலைப்பரப்பி வைக்கின்றது; கைகளையும் பரப்பி விரித்துக்கொண்டிருக் கின்றது. சமகிலையில் முன்னேற்றம் அடைந்ததும், காலேயும் குறுக்கு கின்றது; கைகளும் வேறுசெயல்களுக்குப் பயன்படுகின்றன. அங்ங்னமே சிலசமயம் கால்களை அதிக உயரமும் சிலசமயம் சிறிது உயரமும் தூக்கு கின்றது; முழுக்காலையும் பதிய வைக்கின்றது. குதிகால், விரல்கள் இவற்றின்மீது ஆதிக்கம்பெற நாளாகின்றது. நாளடைவில் வேகமாக நடக்கவும் ஓடவும் பழகிவிடுகின்றது. இவற்றையெல்லாம் கூர்ந்து நோக்கிளுல் ஒவ்வொன்றிலும் முதலில் பயனற்ற இயக்கங்களும் வேண் டாத இயக்கங்களும் பங்கு பெறுவதையும், நாளடைவில் அவை குறைந்து வருவதையும் காணலாம். இச்செயல்களில் தொடர்பான ஒழுங்குமுறை இருப்பதற்கு முதிர்ச்சியே காரணம் ஆகும். சமநிலை பெறுவதிலுள்ள ஒழுங்கு முறையினை முதிர்ச்சியைக்கொண்டு விளக்குவோம். குழந்தை உட்காரு வதற்கு முன்னர் தலையைத் துக்கக் காரணம் என்ன ? கழுத்து இயக்கங் களைக்கட்டுப்படுத்தும் நரம்பு மையங்கள் இடுப்பு, கால் பகுதிகளின் இயக்கங்களைக்கட்டுபடுத்தும் நரம்பு மையங்கள் முதிர்ச்சியடைவதற்கு முன்பே முதிர்ச்சியடைந்து விடுகின்றது. மனிதனின் நேராக கிற்கும் கிலே யும் இடப்பெயர்ச்சியும் மிகச் சிக்கலான நரம்புகளின் பொறிநுட்பம்" வாய்ந்தவை. இப் பொறிநுட்பம் முதிர்ச்சியொன்ருலேயே கைவரக் கூடியது. குழந்தை நடக்கும் நிலையில்தான் இது செயற்படக்கூடிய தாகவுள்ளது. அங்ங்னமே, கற்றலும் இதில் பங்குபெறுகின்றது. பயிற்சியும் பலப்படுத்தலும் திறமையான சமனிலைக்கும் இடப்பெயர்ச்சிக் கும் இன்றியமையாதவை. ஆற்றல்கள் தம்மிடம் வளரவளர, குழந்தை அவற்றை மிக ஆர்வத்துடன் பயன்படுத்துவது அதன் தனிச்சிறப்பு. அவற்றிற்கு அதிகமான பயிற்சியளித்து அவற்றைப் பலப்படுத்தி விடு கின்றது. எனவே, முதிர்ச்சியும் கற்றலும் நடைவளர்ச்சியில் துணைசெய் கின்றன என்று முடிவு கட்டலாம். குழந்தைகளிடம் காணப்பெறும் சமூக உணர்ச்சி, அறிவு, உள்ளக் கிளர்ச்சி, மொழி, இயக்கம் ஆகியவற்றின் வளர்ச்சியை முன்னரே விளக்கியுள்ளோம். அதனை மீண்டும் ஒருமுறை பயின்று இவ்விடத்தில் நினைவுகூர்க. s”. Guirgi' ot-Lito - mechanism.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/172&oldid=777862" இலிருந்து மீள்விக்கப்பட்டது