பக்கம்:கல்வி உளவியல்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிவழியும் சூழ்நிலையும் 153 கோவாவைவிட, உடல் வன்மையைத் தவிர அனைத்திலும் முன்னேற்றம் அடைந்திருந்தான். டோனல்டின் 19-ஆம் திங்களில் இச்சோதனை கிறுத்தப்பெற்றது. சோதனை-2 இரட்டைக் குழவிகளுள் ஒன்றிற்கு 46 வாரத்திற் குப் பிறகு 6 வாரம் மாடிப்படிகள் ஏறுவதில் பயிற்சி அளித்தனர். மற் ருென்றிற்கு அப்பொழுது பயிற்சி அளிக்காமல் 53 வாரத்திற்குப் பிறகு 2 வாரமே பயிற்சி அளித்தனர். இரண்டாவது குழந்தையின் மாடியேறும் திறன் மேம்பட்டதாகக் காணப்பெற்றது. சோதனை-3 : கமலாவும் விமலாவும் 20 திங்கள் வயதுள்ள ஒரு கரு இரட்டைக் குழந்தைகள். இவர்கள் தம்மிலும், குழுவினுமிருந்து முற்றிலும் பிரிக்கப்பெற்றனர். கமலாவுக்கு 5 வாரம் மிகுதியான சொற் பயிற்சி அளித்தனர். அவள் கற்றதைச் சோதனையால் அளந்து கண்ட னர். விமலாவை வேறுவிதமாக நடத்தினர். மொழிகற்கும் வாய்ப் பினின்று அவளை ஒதுக்கினர். ஒருவரும் அவளிடம் பேசுவதில்லை. 5 வாரங்களுக்குப் பிறகு கமலாவிற்கு அளித்த பயிற்சியையே அவளுக்கும் தந்தனர். பயிற்சி அதிகப் பலன் தந்தது. கமலா முன் ல்ை ஒரு நாளில் கற்றதைவிட விமலா அதிகச் சொற்களைக் கற்ருள். 4 வாரத்திற்குப் பிறகு இப்பயிற்சி நிறுத்தப்பெற்றது. விமலா கமலாவைவிட 7 சொற் களை அதிகம் கற்றிருந்தாள். இச் சோதனைகளால் நாம் அறிந்து கொள்பவை : (1) முதிர்ச்சி யும் ஒரு கற்றல் கூறு ; கற்றலுக்கு அது மிகவும் இன்றியமையாது வேண்டற்பாலது. (2) ஒரே தேர்ச்சி கிலேயடைவதற்கு வெவ்வேறு முதிர்ச்சி நிலை களில் வெவ்வேருண அளவான பயிற்சி வேண்டும். முதிர்ச்சி அதிக மால்ை பயிற்சி சற்று குறைவாகவே தேவை. (3) மொழி வளர்ச்சியிலும் பக்குவமடைவதற்கு முன்னர் நீண்ட காலப் பயிற்சியளித்து அடையும் நலனைவிட, பக்குவமடைந்த பின்னர் சிறிது காலப் பயிற்சியினலேயே அதிகப் பலனை அடையலாம். இந்த உண்மைகள் கல்வித்துறையில் மிகவும் பயன்படத் தக்கவை. கணிதம், சமூகநூல் போன்ற கருத்துபற்றிய துறைகளை மிக இளம் பரு வத்தில் குழந்தைகளுக்குக் கற்பித்தலால் பயன் இல்லை. பக்குவமடைந்த பின்னர் தேர்ச்சி விரைவாகச் செல்லுமாதலின், தக்க பருவத்தில் அவற் றைப் பயிற்றுதல் வேண்டும். குழங்தை வேறு, முதிர்ந்த மனிதன் வேறு என்பதை உணரவேண்டும். முதிர்ந்தவனுக்கு ஏற்பவை குழந்தைக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/175&oldid=777868" இலிருந்து மீள்விக்கப்பட்டது