பக்கம்:கல்வி உளவியல்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிவழியும் சூழ்கிலேயும் 157 சிலர் கல்லீரல் பித்த நீரை உண்டாக்குவதைப் போல மூளை எண் ணங்களை உற்பத்தி செய்கின்றது என்று கூறுகின்றனர். மூளை எண்ணங் களே உண்டாக்குவதை எவரும் பார்த்ததில்லை. மூளையிலுள்ள நரம் பணுக்களில் நேரிடும் மாறுதல்களைச் சோதித்து எண்ணங்கள் எங்ங்ணம் உற்பத்தியாகின்றன என்று கண்டறிய மேற்கொண்ட முயற்சி பலனற்ற தாகிவிட்டது. ஆயினும், எண்ணங்களும் உள்ளக்கிளர்ச்சிகளும் உடற் செயல்களினின்று வேறுபட்டிருப்பதை எவரும் மறுக்க முடியாது. உண் மையில் எண்ணங்களும் உள்ளக்கிளர்ச்சிகளும் உடலின் எப்பகுதிகளி னின்று வருகின்றன என்பதை இன்னும் அறியக்கூடவில்லை. எனவே, உடற்செயல்களைக்கூறும் சொற்களே உளச் செயல்களுக்குப் பயன்படுத்து வது தவறு. (எ டு) "ஓர் எண்ணம் என் மூளையில் உதித்தது . என்பது சரியன்று. எண்ணம் மனத்திற்குட்பட்டதேயன்றி, மூளைக் கனறு. இக்காலத்தில் தனியாளின் கடத்தை வாயிலாக அவனது மனத்தை அறுதியிடுகின்றனர். கல்வி உளவியலில் நமக்கு மிகவும் வேண்டுவது மாளுக்கரின் நடத்தையே. கடந்த சில யாண்டுகளாகக் கல்விக்கும் பயன்படும் தனியாளின் நடத்தையை அனுசரிக்கும் முறையிலேயே கல்வி உளவியல் கற்கப்பெறுகின்றது. மாளுக்கரின் நடத்தை சீர்திருந்து வதே கல்வியின் சிறந்த கூறு என்பதை நாம் நன்கு அறிவோம். மனம் ஓர் உயிரியில் எங்ங்ணம் பயன்படுகின்றது என்பதை ஆராய்வதே தற் கால ஆராய்ச்சியாக இருந்து வருகின்றது. இயல்பூக்கக் கொள்கைகள் தனியாள் என்பது குடிவழியும் சூழ்நிலையும் இயற்றின விளைவு என்பதை மேலே கண்டோம். தனியாளின் ஒழுக்கமும் ஆளுமையும் இயல்பாக, பிறவியிலேயே அமைந்த திறன்களாலும் அவை சூழ்நிலையால் அடையும் மாற்றத்தாலும் வளர்ச்சியாலும் உண்டாகின்றன என்றும், அவனது நடத்தையின் ஒரு பகுதி இயல்பானது, குடிவழியே வந்தது, கற்றதஞல் பெற்றது அன்று என்றும், பிறிதொருபகுதி முயன்று பெற்றது, கற்றது என்றும் அறிந்தோம். ஈண்டு பிறவியிலேயே, குடி வழியாக அமையப்பெற்ற இயல்பூக்கங்களைப்பற்றி ஒரு சிறிது ஆராய். வோம். 5:57 நீந்துதல், தேனி மதுவைச் சேகரித்தல், குருவி கூடுகட்டுதல், மயில் தோகையை விரித்தாடுதல், பூனை எலிபிடித்தல், குழந்தை மார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/179&oldid=777878" இலிருந்து மீள்விக்கப்பட்டது