பக்கம்:கல்வி உளவியல்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#58 கல்வி உளவியல் புண்ணல்-ஆகியவை போன்றவை இயல்பூக்கச் செயல்கள் ஆகும். ஆளுல், இயல்பூக்கம் இன்னதென்று திட்டமாக வரையறுத்துக் கூறுவது அவ்வளவு எளிதன்று. இயல்பூக்கங்களின் தன்மைபற்றியும் எண். ணிைக்கைபற்றியும் உளவியல் அறிஞர்களிடையே கருத்துவேறுபாடுகள் உண்டு. சிலர் இயல்பூக்கம் என்பதே இல்லை என்பர்; சிலர் இயல்பூக்கம் என்ற சொல்லையே கைவிட்டனர். அதற்குப் பதிலாக அவர்கள் உந்தல்" ஊக்குநிலை போன்ற சொற்களைக் கையாளுவர். உந்தல்கள், ஊக்குநிலை கள் ஆகியவற்றைக் கீழே காண்போம். பொதுவாகக் கூறுமிடத்து இயல் பூக்கம் என்பது மிகவும் சிக்கலானது; மாறுந் தன்மையுடையது. அது ஒரு கோக்கத்தைக் கொண்டது; முழு உயிரியின் வேலையாக இருப்பது. மனிதனும் இயல்பூக்கமும் விலங்குகளின் செயல்கள் யாவும் இயல்பூக்கச் செயல்களே. மக்களின் செயல்களில் இயல்பூக்கச் செயல் கள் அவர்களின் சிக்தனையாற்றலால் மாறுதலடைகின்றன. பசி கொண்டவுடன் உணவை விரும்பவும், திகிலடைந்ததும் ஓடவும், ஆராய்வு ஆர்வம் எழுந்ததும் ஆராயவும், நம்முடைய இயல்பூக்கங்கள் தூண்டுகின்றன. ஆனல், இவற்றை காம் செய்து தீரவேண்டும் என்ப தில்லை. கம் இயல்பூக்கங்கள் உள்ளத்தின் ஆட்சிக்குட்பட்டவை ; மாறும் தன்மைவாய்ந்தவை. இயல்பூக்கம் இறுதி இலக்கைத்தருகின்றது. ஆளுல், அறிதிறன் இவ் இலக்கைப் பெறும் வழிவகைகள் அறுதியிடு கின்றது. ஒரு தாய் தன் குழந்தையின் கலத்தை இயல்பூக்கத்தின் பயனுக விரும்புகிளுள் என்ருலும், அவள் தன் அறிதிறனுல் அங்கலத்தை மீனெண் ணெயிஞலே இலேகியத்தினலோ பெறுகின்ருள். அறிதிறன் இறுதி இலக்கைக்கூட மாற்றி வேறு பயனே நாடச் செய்யும் ஆற்றலுடையது. இதையே உயர்மடைமாற்றம்' என்பர். யானை மரங்களைப் பிடுங்கி மனிதர்களைக் கொல்லும். ஆனால், அதன் பலத்தை நல்வழியிற் பழக்கி விட்டால் அரியபெரிய வேலைகளைச் செய்யும். ஒருவன் தன் போரூக்கத் தைத் தன்னுடைய தோழர்களைத் தாக்கவும் பயன்படுத்தலாம்; தன் தோழர்களையோ பிற பெரியோர்களையோ வலியாரிடமிருந்து கர்ப்பாற்றவும் பயன்படுத்தலாம். இவ்வாறு உயர் மடைமாற்றம் செய்து தீயபலனுக்குப் பதிலாக கற்பலன அடையலாம். மக்டுகல் என்பாரின் இயல்பூக்க விளக்கம் : மக்டுகல்: என் பாரின் இயல்பூக்கக் கொள்கையை அனைவரும் ஒருவாறு ஒப்புக்கொள்வர். | • • a sza - drive, soerse aan - motive. o 12-ui w wi-up rģipto - Sublimation. 9***@** - McDougall.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/180&oldid=777882" இலிருந்து மீள்விக்கப்பட்டது