பக்கம்:கல்வி உளவியல்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிவழியும் சூழ்நிலையும் #59 மனிதனுக்குப் பதினன்கு இயல்பூக்கங்கள் உண்டென்றும், அவை ஒவ் வொன்றும் ஒவ்வொரு உள்ளக்கிளர்ச்சிகளோடு இணைந்துள்ளன என்றும் மக்கேல் கூறினர். அவர் வகுத்த இலக்கணம் இது: இயல்பூக்கம் முதலில் ஒரு பொருளைக் கவனிக்கின்றது. பிறகு அதனல் எழும் உள்ளக்கிளர்ச் சியை உணர்கின்றது. அதன் பின் அதனே அடைவதற்கான ஒரு செயலைப் புரிகின்றது (எ.டு. பசி உண்டானதும் உடலின் தேவையை அறிகின்ருேம், பிறகு உணவு வேண்டுமென்ற உணர்ச்சி உண்டாகின்றது. பசியைப் போக்கிக்கொள்ள உணவுப்பொருளை எடுத்து உண்கின்ருேம். இயல்பூக்கம் இவ்வாறு செயற்படுங்கால் அதில் அறிவு, உணர்ச்சி, முயற்சி என்ற முக் கூறுகள் காணப்பெறுகின்றன. இந்த மூன்று கூறுகளில் உணர்ச்சிக் க.றே முக்கியமானது என்றும், இயல்பூக்கங்கள் தத்தமக்குரிய உள்ளக் கிளர்ச்சிகளுடன் இணைந்தவை என்றும் கூறி, முக்கியமான பதினுன்கு இயல்பூக்கங்களையும் அவற்றுடன் இணைந்த உள்ளக்கிளர்ச்சிகளையும் தருகின்ருர் மக்கேல், இக்கொள்கை அறிஞர் யாவருக்கும் ஏற்புடைத்தன்று. இயல்பூக்கங் கள் உள்ளக்கிளர்ச்சிகளுடன் இணைந்தவை என்று இவர் கூறுவதை ஏற்றுக்கொள்ளலாமாயினும், இன்ன இயல்பூக்கத்திற்கு இன்ன உள்ளக் கிளர்ச்சிதான் உரியது என்று வரையறுப்பதை ஏற்றுக்கொள்ள இயலாது. போருக்கத்திற்கு வெகுளியும், ஒதுங்கூக்கத்திற்கு 'அச்சமும் கன்கு அமையும். ஆளுல் உணவு தேடுக்கம், கட்டுக்கம் முதலியவற்றின் செயலில் இத்தகைய உள்ளக் கிளர்ச்சி கிலைகளைக் காண்பதரிது. அங்ங்னமே, காய் குரைத்தல் சினத்தால்தான் என்று கூறுவது இயலாது; அது அச்சத்தாலும் தற்காப்பாலும் உண்டாகலாம். மேலும், இயல்பூக்கம் என்னும் சொல் அறிதிறனின் மறுதலையாக வழங்கிவருவதால் மக்களின் செயல்களை இதனைக் கொண்டு விளக்குவது தவறு என்பது பல அறிஞர் களின் கருத்து. மக்கேலும் தம் பிற்கால நூலாகிய மனிதனுடைய ஆற் றல்கள்’’ என்னும் நூலில் இயல்பூக்கம் என்னும் சொல்லைப் பயன்படுத்த வில்லை. தற்கால அறிஞர்களும் இயல்பூக்கம் என்னும் சொல்லே விடுத்து உள்ளக்கிளர்ச்சிகளை ஆற்றலின் தோற்றுவாயாகக் கொண்டு நடத்தையை விளக்குகின்றனர். இயல்பூக்க வன்மையும், வயதும், வேறுபாடும் : இயல்பூக்கங்கள் அனைத்தும் பிறந்தவுடனேயே தோன்றவேண்டும் என்பதில்லை. சில இயல்பூக்கங்கள் காளாவட்டத்தில் தோன்றலாம். குழவிப் பருவத்தில் 3's Guires;ésio - instinct of pugnacity. **śāāa śāth - instinct; of flight.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/181&oldid=777884" இலிருந்து மீள்விக்கப்பட்டது