பக்கம்:கல்வி உளவியல்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 கல்வி உளவியல் ருடன் இணைந்து, பிணைந்து சிக்கலும் நுட்பமும் மிகுதலால் உருவாகின் றன. இவ் வளர்ச்சி முறையை அறிவதரிது. உடல்தேவைகளும் சமூக வன்மைகளும் ஒருங்கிணைந்து ஒருவரது ஆராய்ச்சித் திறனைத் தூண்டு கின்றன; அல்லது அவரை வாழ்க்கையில் போராடவோ ஒதுங்கவோ ஊக்குகின்றன ; அல்லது அக்கறையுள்ளவராகவோ சிரத் தையற்றவ ராகவோ ஆக்குகின்றன. ஊக்கிகளின் செயல்கள் ஊக்கிகள் கற்றல் முறையில் பலவகைகளில் பயன்படுகின்றன. இவற்றை மூன்று வகையாக அடக்கிப் பேசலாம். - முதலாவது : ஊக்கிகள் நடத்தைக்கு ஆற்றலையளிக்கின்றன ; செயலைப் பலப்படுத்துகின்றன. நம்முள் அடங்கியுள்ள மன ஆற்றல் களை விடுவித்துச் செயல்களைத் தூண்டுவிப்பன ஊக்கிகளே. எடுத்துக் காட்டாக பசி, தாகம் போன்ற உடற்கூறு இயலான தேவைகள் தசை களிலும் சுரப்பிகளிலும் துலங்கலே எழுப்புகின்றன. இவை உள்ளெழு துண்டலால் எழுபவை. வெளி எழு துண்டல்களும் உள்நிலைகளும் சேர்ந்து பொருத்தப்பாட்டு நடத்தையை அமைக்கின்றன. - - இரண்டாவது: ஊக்கிகள் சில இயக்கங்களை விலக்கிச் சில இயக்கங்களையே தேர்ந்தெடுக்கத் துணையாக அமைகின்றன. செய்தித் தாள்களை அனைவரும் ஒரே மாதிரியாகப்படிப்பதில்லை. சிலர் விளம்பரப் பகுதியையும், வேறு சிலர் அரசியல் பகுதியையும், இன்னும் சிலர் வணிகப்பகுதியையும், மற்றும் சிலர் ஆட்டப்போட்டிப் பகுதியையும் இவ் வாறு ஒவ்வொருவரும் தத்தமக்குத் தேவையானவற்றையே படிக்கக் காண் கின்ருேம். இங்ங்னமே ஒரு கோக்கத்தோடு ஒரு நூலைப்படித்தால் அங் கோக்கத்திற்கு இசைக்த பகுதிகளையே படிக்கின்ருேம். ஒரு சொற்பொழி வைக் கேட்ட பலரைத் தாம் கேட்டவற்றை வெளியிடச் செய்தால் அவர் கள் வெவ்வேருக எழுதுவதைக் காணலாம். இதனுல்தான் ஒரே பிரச் சினையைக் குறித்து வெவ்வேறு செய்தித்தாள்கள் வெவ்வேறுவிதமான கருத்தமைந்த தலையங்கங்களைத் தீட்டுகின்றன. எனவே, எச்செயலைச் செய்தாலும் கோக்கங்கருதிச் செய்தல் வேண்டும். கற்றலில் வெறும் பயிற்சியளிப்பதைத் தவிர்த்து, குறிக்கோளுடன் கற்கும் பயிற்சி யளித் தல் வேண்டும். அப்பொழுதுதான் திறமையாகக் கற்றல் நிகழும். மூன்ருவது : ஊக்கிகள் நம் நடத்தையை நெறிப்படுத்துகின்றன. இச் செயல் தேர்ந்தெடுக்கும் செயலுடன் தொடர்பு கொண்டது. ஓர் உயிரி இயங்கில்ைமட்டிலும் போதாது; அவ்வியக்க ஆற்றல் ஒரு குறியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/186&oldid=777894" இலிருந்து மீள்விக்கப்பட்டது