பக்கம்:கல்வி உளவியல்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊக்கு கிலேயும் உள்ளக் கிளர்ச்சிகளும் 1.65 நோக்கிக் கொண்டுசெலுத்தப் பெறுதல் வேண்டும். அனைத்தையும் கற்றுவிட்டோம் என்ற அகங்தை கொண்டு களிப்பவர் அதற்குமேல் கற்கமாட்டார்கள். தம்மைவிட அதிகமாகக் கற்றவர்களை நோக்கிக் கருத்தழியச் செய்வதுடன் கில்லாது, எதைக் கற்கவேண்டும், எதனை எங்ஙனம் கற்க வேண்டும் என்ற நோக்கங்களையும் அவர்கள் முன்நிறுத்தி ஞல், அவர்கள் நிறைந்த பயனை எய்துவர். பள்ளிகளில் கட்டுரைப் பயிற்சி தருவதில் செம்மையான சொற்களைக் கையாண்டு தம் கருத்தைத் திறம்பட வெளியிட வேண்டும் என்ற குறிக்கோளை மாளுக்கர்கள் அறியச் செய்தால் சிறந்த முறையில் வெற்றி காணலாம். ஒரு சுவையான நிகழ்ச்சி : ஒரு மாணுக்கன் "கான் விடுமுறை நாட்களை எங்ங்ணம் கழிப்பேன்? " என்ற பொருள்பற்றி ஒரு கட்டுரைக் கடிதம் எழுதி ஆசிரியரை அண்மி, ஐயன்மீர், யான் எழுதிய கடிதத்தை எப்பொழுது திருப்பித்தர இயலும் ? எனக் கேட்டானும். ஆசிரியர் அவனிடம், குழந்தாய், எனக்கு அதிக வேலை இருப்பதால், உடனே திருத்தித் தர இயலாது. ஒன்றிரண்டு நாட்கள் கழித்து வருக ! என்ருராம். அதற்கு அம்மாளுக்கன், ஐயன்மீர், ஒரு விண்ணப்பம். நான் அக்கடிதத்தை இன்றே அஞ்சலில் சேர்க்க வேண்டுமே ? அருள்கூர்ந்து உடனே திருத்தித் தாருங்கள் என்ருளும். மாளுக்கனே ஊக்கியது யாது ? அதன் வலிமை என்ன ? ஊக்கிகளின் செயல்களையும் அவற்றின் வன்மையையும் அறிந்து ஆசிரியர்கள் பணியாற்றில்ை கற்பித்தலில் நிறைந்த பயனைக் காண 6Q仔拉。 பரிசில்களும் தண்டனைகளும் ஊக்கிகள் கற்றலில் பயன்படுகின்றன என்பதை மேலே கண்டோம். இனி, ஊக்கிகளால் எங்ங்னம் மாளுக்கர்களின் நடத்தையை ஒழுங்கு படுத்தலாம் என்பதை ஆராய்வோம். குழந்தை வாழும் சூழ்நிலையில் பல வகைத் துலங்கல் வாய்ப்புக்கள் இருக்கின்றன. அவற்றுள் சிலவற்றை இயற்றி மற்றவற்றை விடுப்பது கல்விக்கு அடிப்படையாகும். முதல் கிலைப் பலன்கள் யாவும் ஊக்கு நிலைகளைத் திருப்தி செய்வதால் ஈர்ப்பைக்' குறைக்கின்றன. (எ-டு) பசி ஈர்ப்பு உண்ணுதலால் குறை கின்றது ; நீர்வேட்கை ஈர்ப்பு நீர்பருகுவதால் குறைகின்றது. வழிகிலேப் பயன்க்ள் அல்லது ஈட்டிய பலன்கள் முதல்நிலைப் பயன்களுடன் கொண் டுள்ள தொடர்பிளுல் வலியுறுகின்றன. பயன் விதியைக நம்பும் கல்வி T I. EiJ- tension. 4* Uuia cag-thelaw of effect.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/187&oldid=777896" இலிருந்து மீள்விக்கப்பட்டது