பக்கம்:கல்வி உளவியல்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊக்கு நிலையும் உள்ளக் கிளர்ச்சிகளும் 171 (4) தண்டனை, கற்கும் நிகழ்ச்சியினையொட்டி கருதப்பெறுதல் வேண்டும். இது மிகமிக முக்கியமானது. குழந்தை தன் மதிப்பை இழக்க ஒருப்படாது. அறிவுரையே சிலசமயம் போதும்; அல்லது ஒரு கடுஞ்சொல் போதும். குழந்தை தன் னம்பிக்கையை இழக்காதபடி தண்டனை தருதல் வேண்டும். (5) உணர்ச்சி ததும்பும் மாளுக்கர்களிடம் ஆசிரியர் கவனமாக கடந்து கொள்ள வேண்டும். தவருன செயலின் காரணத்தை நன்கு அறிந்த பிறகே தண்டிக்க வேண்டும். ஆத்திரத்திலும் கோபத்திலும் தண்டனைகளைக் கையாளலாகாது. அவசிய மற்ற தண்டனைகளை மேற்கொள்ளவும் கூடாது. சில உள்ளக் கிளர்ச்சிகள் உள்ளக்கிளர்ச்சிகளும் ஊக்கு நிலைகளுக்கு ஆதாரமாகின்றன. உள்ளக்கிளர்ச்சி என்பது யாது? உள்ளக்கிளர்ச்சி: இன்னது என்பதை வரையறைப்படுத்தி உரைத்தல் இயலாது. நாம் அனைவரும் இதனை அறி வோம்; ஆயினும், அதன் பொருளை சொற்களால் எல்லேகட்டி உணர்த்த முடியாது. வெகுளி' என்பது ஓர் உள்ளக் கிளர்ச்சி ; ஆளுல், அதனை நாம் உணர்ச்சி' எனக் குறிப்பிடுகின்ருேம். சாதாரணமாக நாம் உணர்ச்சிக்கும் உள்ளக்கிளர்ச்சிக்கும் வேறுபாடு அறியாது அச்சொற்களை மாற்றி வழங்குகிருேம். ஆனல், உளவியலில் வெகுளி, அச்சம், 'அன்பு:ச ஆகிய அனுபவங்களைக் குறித்தற்கு உள்ளக்கிளர்ச்சி என்றே வழங்கு கின்றனர். உள்ளக்கிளர்ச்சி என்பதை 'உயிரியின் கிளர்ந்தெழும் கிலே’ என்று வரையறை செய்வர் உளவியலார். உள்ளக்கிளர்ச்சி ஏற்படுங்கால் உயிரிமுழுவதும் நிலைகுலைவதால் இவ்வாறு வரையறை செய்யப்பெற் றிருக்கின்றது. பண்டைத் தமிழர் உள்ளக் கிளர்ச்சிகளில் பாட்டிற்குச் சிறந்தனவற்றை மெய்ப்பாடு என வழங்கினர். மெய்ப்பாட்டில் உடல் நிலையும் இன்றியமையாது என்பதனையும் அவ்வுடல் நிலைகளே அம்மெய்ப் பாடு வெளிப்படுவதற்கு வழியாக கிற்கின்றன என்பதனையும் நன்கறிந் திருந்தனர். தொல்காப்பிய உரையாசிரியராகிய பேராசிரியர் என்பார் "மெய்ப்பாடு என்பது பொருட்பாடு. அஃதாவது உலகத்தார் உள்ள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப் புலப்படுவதோர் ஆற்ருன் வெளிப்படுதல் ” என்று கூறியிருப்பதை அறிக. ஒரு சில உள்ளக் கிளர்ச்சிகளைச் சற்று விரிவாக ஆராய்வோம். 33 Egerí ístí-emotion." so Gassi - anger. si.sriigi- feefing, 32 giảsữ, - fear, 3 3 3ịcảriị - loVe.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/193&oldid=777910" இலிருந்து மீள்விக்கப்பட்டது