பக்கம்:கல்வி உளவியல்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊக்கு நிலையும் உள்ளக் கிளர்ச்சிகளும் 175 கின்றன. ஐந்து யாண்டு முடிவதற்குள் இவை மறைகின்றன. ஆரும் யாண்டில் புது வகையான அச்சம் ஒன்று தோன்றுகிறது. இல்லாத பொருள்களும், கற்பனைகளும் அச்ச மூட்டத் தொடங்குகின்றன. இருட் டில் போவதென்ருல் அச்சம், பேய் என்ருல் அச்சம், இன்னும் எத் தனையோ வகையான அச்சங்கள் எழுகின்றன. குமரப்பருவம் எய்தும்பொழுதும் தொழிலில் அமர்ந்த பிறகும் வெவ் வேறு அச்சங்கள் தோன்றுகின்றன. முதலில் பருப் பொருள்கள் பய முறுத்துகின்றன ; நாளடைவில் அறிவும் கற்பனையாற்றலும் வளர வளர, எதிர்கால நிகழ்ச்சிகளே அதிகமாகப் பயத்திற்குக் காரணங்களாகின்றன. (எ-டு) உத்தியோகத்தை இழத்தல், மதிப்பை இழத்தல், திருடர்கள் கொள்ளையடித்தல், மேல் வகுப்புக்கு மாற்றம் இல்லாது போதல்-என் பவை போன்றவை. இப் பருவத்தில் பால் வேட்கையைச் சேர்ந்த புதிய அச்ச நிலைகளும் தோன்றலாம். வயது ஏற ஏற, இயற்கைக்கு அப்பாற் பட்ட நரகம், பூதம், பைசாசம் முதலியவற்றைப்பற்றிய அச்சமே வளர்ந்து கொண்டு வருகின்றது. அச்சத்தை வலுப்படுத்தும் கூறுகள் : சில கிகழ்ச்சிகள் அச் சத்தை வலுப்படுத்துகின்றன. சிவகாசி வெடிகளிகுல் ஒரு தடவை உண்டான விபத்து, அவ் வெடிகளைக் காணும் பொழுதெல்லாம் திகிலே உண்டாக்குகின்றது. பெற்ருேர்கள் பயங்கொள்வதை அறியும் குழந்தை களிடம் அச்சம் உறைப்பாக வேரூன்றுகின்றது. ஓர் ஆய்வாளர் தாய்மாரின் அச்சங்களையும் அவர்களது குழவிகளின் அச்சங்களையும் கணக்கிட்டுப் பார்த்தபோது அச்சம் மிக்க தாய்மtரின் குழவிகளே பெரிதும் அச்ச முடையனவாகக் கண்டாராம். சில சமயம் பெற்றேர்கள் பூச்சாண்டி, பேய் போன்ற தேவையற்ற பயத்தை உண்டாக்குவதாலும் சிறுவர்களே அச்சப் பேய் பற்றுகின்றது. படக் காட்சிகளில் காணும் பயங்கர நிகழ்ச்சி கள், சில செய்தித் தாள்களில் காணும் கோரச் செய்திகள், சில ஒலி பரப்பு நிகழ்ச்சிகள் போன்றவை அச்சத்தை வலுப்படுத்தும் கூறு களாகும். அச்சத்தின் பயன்கள் : அறிஞர்கள் பலர் அச்ச உணர்ச்சியைக் கடிந்து கூறிலுைம், அச்சத்திலுைம் பயன் உண்டு என்பது அறிதற்பாலது. அச்சம் விபத்திலிருந்து தடுக்கின்றது , முரட்டுத் தனத்தை அடக்குகின் றது; செயலில் விழிப்புடனிருக்க உதவுகின்றது. வாழ்க்கையில் பலநிலை களில் எச்சரிக்கையாக கின்று பயன் அளிக்கின்றது. (எ-டு) பள்ளி செல் லக் காலதாமதம் ஆகிவிடும், திங்கள் இறுதி வரைக் கடனின்றிக் காலக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/197&oldid=777918" இலிருந்து மீள்விக்கப்பட்டது