பக்கம்:கல்வி உளவியல்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊக்குநிலையும் உள்ளக்கிளர்ச்சிகளும் 179 செய்யும்முறை அறவே ஒழியவேண்டும்; அது அலுப்பு, எதிர்ப்பு, அச்சம் முதலியவற்றைக் கிளப்பிவிடும். இன்பத்தைப் பெருக்குவதனுல்தான் ஊக்கிகளுள் பரிசில்கள் தண்டனைகளை விடச் சிறந்தவை என்று மேலே கூறிளுேம். நவீனக் கல்வி இன்பத்திற்கு இடம் அளிப்பினும், கடை முறையில் அது அவ்வளவாக வற்புறுத்தப்பெறவில்லை. அன்பு ': வாழ்க்கையின் தொடக்கத்திலேயே அன்பும் தொடங்கு கின்றது. சிறிது காலத்திற்குள் குழந்தையின் அன்பு, பொருள்களையும் ஆட்களையும் தொடர்கின்றது. பெற்ளுேர், உற்ருர், உறவினர் ஆகியோர் மேல் அன்பு சிறிதுசிறிதாகப் படர்கின்றது. முதியோனுகுவதற்குமுன் குழந்தை வீடு, குடும்பம், சுந்துப்புறம், நாடு போன்ற கிலேயங்களுடன் பல்வேறு அளவுகளில் அன்பை அமைத்துக்கொள்ளுகின்றது. கிலேமை களுக்கேற்பவும் காலங்கட்கேற்பவும் அன்புப்பற்று வேறுபடுவதையும் காண்கின் ருேம். அன்பு அமையும் ஆற்றல் இயல்பானது. பெரும்பாலும் காம் பெறும் அன்பு சமூகச்சூழ்கிலேயைப் பொறுத்தது என்பது தெளிவு. சிறு வயதிலிருந்தே குழந்தை பெற்ருேரின் அன்பினைப் பெறுகின்றது. அவர் களிடமும் தான் அன்பு பாராட்டுகின்றது. அன்பு ஒரு வழிச்செலவு அன்று. குழந்தைகள் பிறரிடமிருந்து அன்பு பெறுகின்றனர் ; தாமும் பிறரிடம் அன்பு காட்டுகின்றனர். பிறர் புன்முறுவல் கொண்டால் தாமும் முறுவலிக்கின்றனர். சிறுவன் பிறரைக்கட்டித் தழுவுகின்ருன் : பிறரோடு கொஞ்சுகின் ருன். முதுகைத்தட்டிக் கொடுக்கின்ருன். அண் ணன் தம்பிமாருடன் ஒவ்வொரு சமயம் சண்டை விளைவிப்பினும் பிறகு கொஞ்சிக் குலாவுகின்ருன். வீட்டில் பெற்றேரின் அன்பையும் பள்ளியில் ஆசிரியரின் அன்பையும் நாடுகின்றன். விளையாட்டின் வாயிலாகச் சில பொருள்களின் மீது விருப்பம் கொள்ளுகின்ருன். பால் முதிர்ச்சி எய்தி யதும் இவ்வன்பு எதிர்பாலாரைத் தொடர்கின்றது. பிறகு மக்களுடன் இணைகின்றது. குழந்தை வாழ்க்கையில் அன்பின் சிறப்பு : படிமுறை வளர்ச்சி யில்' உயிருளிகள்* உயர்நிலை அடைவதற்கு அன்பு பெரிதும் உதவு கின்றது. குழந்தை நன்கு வளரவேண்டுமானல், பெற்ருேர் அதனிடத்து அன்பு காட்டவேண்டும். தம்மிடம் பெற்றேர் அன்பு இருக்கும்வரை குழந்தைகள் தம்மைப்பற்றிக் கவலை கொள்ள வேண்டுவதில்லையன் ருே? 46 goru - affection. * * படிமுறை susrirë st - evolution, 4 * 2.965 sst ssir • living beings,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/201&oldid=777927" இலிருந்து மீள்விக்கப்பட்டது