பக்கம்:கல்வி உளவியல்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 கல்வி உளவியல் இளமை என்பது உயிருளிகள் உலகமென்னும் பள்ளியில் கல்வி கற்கும் காலமாகும். பூச்சி போன்ற கீழ்நிலை உயிருளிகள் தம் புழுங்லை மாறியதும் உலகில் உணவு தேடிப் பிழைக்கவேண்டும். மக்களின் குழவி களோ பதிளுருண்டுவரை பெற்றேரின் அரவணைப்பில் அமர்ந்திருந்து, உலகவெப்பத்தைத் தணித்துப் பொறுத்துக்கொள்ளும் முறையினைப் பலவகையாலும் பயில்கின்றன. இயல்பூக்கம்* முற்றி வளர்ந்து அறிவு கிலேயோடு பொறுத்தமுறுகின்ற காலமே இளமையாகும். அன்பு இல்லை யாளுல், இளமையில்லை ; இளமையில்லையாளுல் உலகப் பயிற்சியும் இல்லை : அறிவு வளர்ச்சியும் இல்லை. அறிவுவளர்ச்சி இல்லையானல் படிமுறை வளர்ச்சியும் இல்லை. பிறந்ததும் குழந்தை தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் நிலையில் இல்லை. பல யாண்டுகள்வரையில் அது பிறரைச் சார்ந்து கிற்க வேண்டிய கிலேயில் இருக்கின்றது. அதனது உடல்நலமும் மனவளமும் மற்றவர்கள் அதன் பால் காட்டும் அன்பால் அமைகின்றன. வீட்டில் பெற்ருேளின் அன்பையும் பள்ளியில் ஆசிரியரின் அன்பையும் நாடவேண் டியநிலையில் இருக்கின்ருன் சிறுவன். ஆகவே, அவர்கள் அவனுக்காக இயற்றும் இன்பச் செயல்கள், அவனைக் கையாளும் முறை, அவனிடம் கொள்ளும் பொறுமை, அவளுேடு ஆடும் விளையாட்டு, அவனது அச்சங் களைப் போக்கும் முறை, அவன் புண்பட்டால் அதனையாற்றும் வகை, அவன் வளர்ந்தபின் அவன் விடுக்கும் விளுக்கட்கு விடையளிக்கும் முறை, அவனது செயலாக்கங்களுக்கும் கவர்ச்சிகளுக்கும் அவர்கள் காட்டும் வழி ஆகிய யாவுமே பயன் தருவன ஆகும். பெற்றேர் குழந்தை யிடம் காட்டும் அன்புக்கு அளிவில்லை. ஆகவே, குழந்தை வீட்டில் சுயேச்சை பெறுகின்றது. பள்ளியிலும் குழந்தை சுயேச்சையுடன் வாழ வழி வகைகள் இருக்கவேண்டும். குழந்தைகள் ஆசிரியரைப்பற்றிக் கூறுங்கால் அவர் கற்பிக்கும் தன்மையைவிட, அவர் தம்மிடம் காட்டும் அக்கறை, பரிவு முதலியவற்றையே முக்கியமாகக் கவனிக்கின்றனர். ஆசிரியர் தந்தை கிலேயிலிருப்பதால் அவரிடம் அன்பு எதிர்பார்க்கப் பெறுகின்றது. அன்பு வேண்டும் ; ஆனால், உறுதியும் வேண்டும். மாளுக்கர்கள் கண்டிப்பாயும் நேர்மையாயும் இருக்கின்ற ஆசிரியரைத் தான் பாராட்டுவர். இளக்கமானவரையும் உறுதியற்றவரையும் போற்றுவ தில்லை ; விரும்புவதுமில்லை. சிறுவன் இயல்பாகவே பாராட்டுதலை விரும்புகின்றவன்; பிறர் தன்னை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று விழைபவன். ஆசிரியருக்குத் தன்பால் 49 flousou'ssib - instinct.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/202&oldid=777929" இலிருந்து மீள்விக்கப்பட்டது