பக்கம்:கல்வி உளவியல்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊக்குநிலையும் உள்ளக்கிளர்ச்சிகளும் 181 அக்கறை இல்லை என்று தெரிந்தால் வருந்துவான் ; தன்னிடம் பாரபட்ச மாக கடந்துகொண்டாலும் வருந்துவான். தன்னைப் புறக்கணித்தாலும் துன்புறுவான். வயது ஏற ஏற ஒப்பார் மதிப்பையும் பெற விரும்புகின்ருன். ஆசிரியர் அன்பினல் மட்டிலும் கல்லாசிரியராகிவிட முடியாது. உள்ளன் பின் றிப் புறத்தே அன்புள்ளவர்போல் நடிப்பதாலும் பயன் இல்லை. உள்ளன்பு பிள்ளைகளின் நல்வளர்ச்சிக்கு ஒரு சிறந்த ஏதுவாகும், அன் பின் வழியது உயிர்கிலே’ என்ற வள்ளுவர் வாக்கை ஒர்க. அருள் என்னும் அன்பு ஈன்குழவி' என்ற அன்ஞர் யொன்னுரையை எண்ணி எண்ணி மகிழ்க. நல்வாழ்வில் உள்ளக்கிளர்ச்சிகளின் பங்கு மேலே கண்ட வெகுளி, அச்சம், இன்பம், அன்பு போன்ற உள்ளக் கிளர்ச்சிகள் வாழ்க்கைக்குச் சுவையளிப்பதால், சாதாரண வாழ்க்கை யில் அவற்றிற்கு இடம் உண்டு. உள்ளக் கிளர்ச்சிகளே சிந்தனையையும் கடத்தையையும் இயக்கும் முக்கிய விசைகள் ; மூல காரணமாக இருப் பவை. உள்ளக் கிளர்ச்சிகள் மானிட உடலாகிய பொறிக்கு நீராவியும் பெட்ரோல் எண்ணெயும் போன்றவை. தனியாளின் நடத்தையையும் ஒரு சமூகத்தின் நடத்தையையும் உள்ளக் கிளர்ச்சிகள் அறுதியிடுகின்றன. நல்வாழ்விற்கு ஒருவித நற்பாங்கைத் தருபவை இவைகளே. எனவே, கல்வியில் இவை நன்முறையில் கவனம் பெறல் வேண்டும். கடைமுறைக் கல்வியில் இவை தக்க கவனம் பெருதிருப்பது மிகவும் வருந்தத் தக்கது. மாளுக்கன் பாடங்களைக் கற்பது அவன் அவற்றின்பால் கொள்ளும் கவர்ச்சியைப் பொறுத்தது. ஆசிரியர்களும் உடன் பயிலும் பிற மாளுக் கர்களும் அவனிடம் காட்டும் அன்பையும் பரிவையும் பொறுத்தது. பள்ளிவாழ்வில் காணும் நிகழ்ச்சிகளில் அவன் பெறும் இன்பமும் துன்ப மும் அவன் மனப்போக்குகளைத் தீர்மானிக்கின்றன. இவை யாவும் உள்ளக்கிளர்ச்சிகளின் கூறுகளே. எனவே, பள்ளிவாழ்க்கையில் இவை சிறந்த பங்கினைப் பெறுகின்றன. பள்ளியில் பயிலும் மாளுக்கன் ஒருவ னுடைய உள்ளக்கிளர்ச்சி ஆழ்ந்த அன்பிலிருந்து தீவிரமான வெறுப்பு வரை மாறக்கூடும். அங்ங்னமே, உடன் பயில்வோரிடமும் விளையாடுவோ ரிடமும் உற்ற நட்பிலிருந்து ஆழ்ந்த பகைமைவரை அவனுடைய உள்ளக் கிளர்ச்சி வளர்தல்கூடும். எனவே, ஆசிரியர் ஒவ்வொரு மாளுக்கனையும் நன்கறிந்து ஒல்லும்வகையில் அவரவருடைய உள்ளக் கிளர்ச்சியினை கன்முறையில் கையாள வேண்டும். தற்காலக் கல்வியின் முக்கிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/203&oldid=777931" இலிருந்து மீள்விக்கப்பட்டது