பக்கம்:கல்வி உளவியல்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊக்குநிலையும் உள்ளக்கிளர்ச்சிகளும் 183 கூடாதாயினும், ஆசிரியர் இதனை ஒத்துணர்ச்சி: , கருத்தேற்றம்' என்றவற்றின் துணையால் மிகத் திறமையாகக் கையாளலாம். எடுத்துக் 石有LL事岛。 தங்கம் உருக்கித் தழல்குறைத்துத் தேளுக்கி எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ ? . என்ற காலை இளம்பரிதியின் எழிலைக் காட்டும் அடிகளைப்படிக்கும்போதே ஒத்துணர்ச்சியாலும், இயற்கைக்காட்சியின் வனப்பை எடுத்துக்காட்டி விளக்கந்தருங்கால் கருத்தேற்றத்தாலும் மனத்தின் அறிவு கிலக்கு முறையீடு செய்யலாம். இதற்கு ஆசிரியரும் உண்மையான சுவைஞராக இருத்தல் வேண்டும் , அங்ங்ணம் அவர் இராவிடின் அவர் எஞ்ஞான்றும் மாளுக்கரிடையே சுவையை வளர்க்க முடியாது. ஆசிரியர் அனுபவிப் பதை மாளுக்கரும் ஒத்துணர்ச்சியால் அனுபவிப்பர் ; உண்மையான உற்சாகம் தொற்றுநோய்போல் அவரைப்பற்றிக் கொள்ளும். சுவையூட் டுவதில் ஆசிரியரின் மனப்போக்கு முக்கியமானதேயன்றி, அவர்கூறும் செய்தி அன்று. மூன்ருவது இயற்றிகில்ே பாடகரே இசைக்கலையை மதிப்பிடமுடி யும் என்பதும், இயற்றிய ஆசிரியனே இலக்கியத்தை மதிப்பிடமுடியும் என்பதும் பொதுவாக ஒப்புக்கொண்ட உண்மைகள். ஆல்ை, முற்றிலும் இது உண்மையன்று; இசைக்கச்சேரியைக்கேட்டுத்துய்ப்போரும் நன்முறை யில் இலக்கியத்தைப் படித்துத் துய்ப்போரும் இதனை ஒப்புக்கொள்ளார். ஆனல், க3லகளைப் பார்த்து அவழ்றைப்போலவே சாயல்பிடிப்பவர்க ளிடம்: மதிப்பிடும் திறமை அதிகமாகவுள்ளது என்பதை நாம் நிச்சயம் ஒப்புக்கொள்ளலாம். நம்மில் பெரும்பாலோர் சிறிதளவு பாடலாம்; சிறிதளவு ஓவியம் வரையலாம் : சிறிதளவு வண்ணப்படம் தீட்டலாம் சிறிதளவு கவிதை புனையலாம், அல்லது நூல்கள் எழுதலாம். இப்பழக்கம் நிச்சயம் நம் சுவை வளர்வதற்குப் பெருந்துணை பு:யும். எனவே, இத் தகைய பழக்கங்களைச் சிறு வயதிலிருந்தே மாளுக்கர்களிடம் ஏற்பட, வளர, அவர்களுக்கு உற்சாகம் ஊட்டவேண்டும். இதில் மாளுக்கர்கள் வியத்தகு முறையில் முன்னேற்றம் அடைவதை நாம் நடைமுறையில் காணலாம். ஒரு கவிதை உணர்ச்சி வழியும்படி இசையுடன் படித்தலும் அதனைச் சுவைப்பதற்கு அறிகுறியாகும். அங்ங்ணம் படிக்கும்பொழுது அவர்கள் கவிஞனிடம் எழுந்த உணர்ச்சியையே எட்டிப்பிடிக்கவும்கூடும். s's sigo - sympathy. ** agsägågå- suggestion. 55 சாயல் பிடிப்பவர் - imitator,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/205&oldid=777935" இலிருந்து மீள்விக்கப்பட்டது