பக்கம்:கல்வி உளவியல்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#88 கல்வி உளவியல் கல்வியில் விளையாட்டுமுறை உளநூற்கலை விரிவடைந்த பிறகு கல்வி நிபுணர்கள் இயல்பூக்கங் களுக்கும் அறிவு கிலைக்கும் உள்ள தொடர்பைக் காண விழைந்தனர். அம் முயற்சியினல் குழந்தைகளிடம் இயல்பாகக் காணப்பெறும் விளையாட் டுணர்ச்சியைப்பற்றிப் பல உண்மைக் கருத்துக்களை அறிந்திருக்கின்ற னர். அந்த உணர்ச்சியைக் கல்வித்துறையில் எவ்வாறு பயன் தரும் முறைகளில் திருப்பலாம் என்று அறிஞர்கள் ஆராய்ந்து சில முடிவுகளை யும் கண்டிருக்கின்றனர் ; இன்னும் கண்டு வருகின்றனர். விளையாட்டு முறையில் ஒரு கடமையை நிறைவேற்றும்பொழுது கடமை திறமையாக முடிவதுடன், கிறைவேற்றுவதில் ஓர் இன்பத்தையும் பெற முடிகின்றது. விளையாட்டுமுறை உற்சாகமற்ற வேலையையும் உற்சாகத்துடன் செய்வ தற்கு ஒருவித மனப்பான்மையைத் தருகின்றது. எனவே, விளையாட்டின் நுட்பத்தை அறிவதே கல்வியின் சிக்கலான பூட்டைத் திறந்துவைக்கும் திறவுகோலாகின்றது. விளையாட்டு முறையின் தோற்றம் : விளையாட்டு முறை என்பது ஆங்கில நாட்டுக் கல்வி நிபுணரான கால்டுவெல்குக்* என்பாரால் முதன் முதல் கையாளப்பெற்றது. ஆங்கிலம் கற்பிப்பதில் அவர் இம்முறையை முதன் முதலாகப் பயன்படுத்தினர். ஆங்கில இலக்கியங்களைக் கற்பதில் வெறுப்பையும் மனமின்மையையும் மாணுக்கர்களிடம் கண்ணுற்ற அந்த அறிஞர் தம்முறையில் அவற்றை நீக்கி அவர்கள் இலக்கியங்களை ஆர்வத்துடன் கற்கும்படி செய்தார். அதுகாறும் செகப்பிரியரின் நாடகங்களிலுள்ள சொற்ருெடர்கிளின் பொருள்களும் ஆர்வத்துடன் அறிந்துகொள்ளப்பெருமல் மனப்பாடம் செய்யப்பெற்று வந்தன. இம் முறைப்படி அந் நாடகங்கள் இலக்கியப் பாடவேளைகளில் நடிக்கப்பெற் நன. மாளுக்கர்கள் வெட்டவெளியில் நாடக அரங்கொன்றைச் சமைத்து நாடகங்களை நெட்டுருச் செய்து நடித்தனர். இலக்கியத் திற்குப் புதிய பொருள் துலங்கிற்று ; பாடங்கள் விளையாட்டாக மாறின. இம்மாதிரியே இலக்கணம், கட்டுரை வரைதல் ஆகிய பாடங்களிலும் புதிய உணர்ச்சி ஊடுருவிச் செல்லத் தொடங்கியது. பாடங்களைத் தம் ஆற்றலுக்கேற்றவாறும் விருப்பத்திற்கேற்றவாறும் தேர்ந்தெடுப்பதில் சுதந்திரம் கொடுக்கப்பெற்றவுடனே, ஆங்கிலப் பாடத்தில் ஒரு வியத்தகு முன்னேற்றம் காணப்பெற்றது. எனவே, கால்டுவெல் குக், தேற்றமும் கல்வியும் படிப்பதாலும் கேட்பதாலும் எய்து

  • * &## sồ{5}{&susờ $à: - Caldwell CoGk.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/210&oldid=777947" இலிருந்து மீள்விக்கப்பட்டது