பக்கம்:கல்வி உளவியல்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊக்குநிலையும் உள்ளக்கிளர்ச்சிகளும் 189: வன அல்லவென்றும், அவற்றைச் செய்கையாலும் பட்டறிவாலும் மட்டிலுமே அடைய முடியும் என்றும் நம்பிஞர். கட்டாயத்தால் செய்ய முடியாத கடமைகளையெல்லாம் உற்சாகம் கலந்த முயற்சியால் கிறை வேற்றமுடியும் என்று கருதினர். விளையாட்டினுல்தான் வேலையில் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்க முடியும் என்பதையும் கண் டார். விளையாட்டினல் உடலுக்கும் உள்ளத்திற்கும் கல்ல விருந்தளிக்க முடியும் என்பதையும் அறிந்தார். எனவே, விளையாட்டுமுறை'யின் தந்தையுமாளுர். நாளடைவில் இம்முறை ஏனைய பாடங்களைக் கற்பிப்பதிலும் மேற் கொள்ளப்பெற்றது. வரலாற்றுப் பாடங்களைப் பயிலும்பொழுது குழவிகள் அலெக்ஸாண்டராகவும், செலுக்கலாகவும், புருடோத்தமனகவும், சந்திரகுப்தளுகவும், சாணக்கியனுகவும் கோலம்பூண்டு வரலாற்றையே நாடகமாக கடத்தி வருதல் வேண்டும். தரைநூலைப் பலப்பல காட்சி களாக அமைத்து அந்தந்த நாட்டின் வழக்கங்களையும் பிறவற்றையும் விளை யாட்டாக அமைத்தல் வேண்டும். பூதவியல், இயற்கைநூல், உயிரியல் முதலியவற்றில் வரும் சோதனைகள் யாவும் குழந்தைகள் மிகமிக விழையும் விளையாட்டுக்களாக அமையலாம். கணக்கினேயும் வாழ்க்கைத் துறைச்செயல் திட்டங்களாக" அமைத்துக் கற்பித்தலும் இயலும். வேலையும் விளையாட்டும் வேலையையும் விளையாட்டையும் வேறு படுத்திக் காட்டுவதென்பது எளிதன்று ; அவற்றிற்கு விளக்கந்தருவதும் கடினமே. வேலை வாழ்வுடன் இணைந்த ஒரு புறம்பான செய்கை ; ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைத் தேவையை வேலை முற்றுவிக்கின்றது. ஆனல், விளையாட்டில் புறம்பான நோக்கமொன்றும் இல்லை; அஃது ஒரு வருடைய மகிழ்ச்சியின் பொருட்டே மேற்கொள்ளப்பெறுகின்றது. வேலை மகிழ்ச்சியுடன் விரும்பி ஏற்றுக் கொள்ளப்பெறுவதில்லை ; விளை யாட்டு மகிழ்ச்சியுடன் விரும்பி ஏற்றுக் கொள்ளப்பெறுகின்றது. வேலை யில் அதன் பயனைக்கண்டபொழுதுதான் மகிழ்ச்சி உண்டாகின்றது; விக்ா யாட்டில் ஈடுபட்டிருக்கும் பொழுதே மகிழ்ச்சி ஏற்படுகின்றது. வேல் பலபுறம்பான கட்டுப்பாடுகளால் மேற்கொள்ளப்பெறுவது; விளையாட்டில் பலகட்டுப்பாடுகள் இருப்பினும் அவை விளையாடுபவர்களே ஏற்படுத்திக் கொண்டவை. வேலை உண்மை வாழ்வை ஒட்டியது; விளையாட்டுபாவனை உலகைச் சார்ந்தது. மேற்கூறியபடி வேலைக்கும் விளையாட்டிற்குமுள்ள வேற்றுமை அவ்வ ளவு திட்டமானதன்று. வேலையனைத்தும் முக்கியமாய் இக்காலத்தில் 66 Gouë flo-Lib - project.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/211&oldid=777949" இலிருந்து மீள்விக்கப்பட்டது