பக்கம்:கல்வி உளவியல்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 கல்வி உளவியல் ஆற்றல் வாய்ந்தவையாக உள்ளன. மனிதக் குழவிகள் மட்டிலும் தான் நீண்டதும், துணையை நாடுவதும், மாறுதலடையக் கூடியதுமான குழவிப் பருவத்தைப் பெற்றுப்பல செயல்களைக் கற்க வேண்டியவைகளாக இருக் கின்றன. குழந்தைகளின் மாறுதலடையக் கூடிய நரம்பு மண்டலமும் இதற்கேற்ப அமைந்திருக்கின்றது. கற்றல் என்ருல் என்ன ? கற்றலை ஒரு குறுகிய வரையறைக்குள் அடக்கிக்கூற முடியாது. அது அகன்றதும் பலதிறப்பட்டதுமான ஒரு துறையாகும். அது மனிதன் இயற்றும் எல்லாவினைகளையும் அடக்கிக் கொண்டிருப்பது. ஆகவே, கற்றலின் ஒரு துறைக்குக் கூறும் இலக்கணம் மற்ருெரு துறைக்குப் பொருந்தாது. பொதுவாகக் கூறினல், கற்றல் என்பது தகுந்த துலங்கல் களை ஏற்படுத்திக் கொள்வது என்பது. சில துலங்கல்கள் பிறவியிலேயே தோன்றுகின்றன. (எ-டு. சுவாசித்தல், இமைத்தல் போன்ற அனிச்சைச் செயல்கள் ; உணவு வேட்கை, தாகவிடாய் போன்ற முதல் கிலை ஊக்கி கள். சில துலங்கல்கள் கற்கப்பெறுகின்றன. (எ டு. நூற்றல், பாடு தல், வீணையை மிழற்றுதல் போன்றவை. இவை பிறவித் துலங்கல்களின் மாறுபாடுகளாகும் ; அல்லது புதிய துலங்கல்கள் என்றும் இவற்றைக் கூறலாம். சுருங்கக் கூறின், பிறவித்துலங்கல்களை அடிப்படையாகக் கொண்டு புதிய அறிவு வகைகளையும், உணர்ச்சி வகைகளையும், முயற்சி வகைகளையும் கற்கின்ருேம். புதிதாகக் கற்கும் செயல் தனியாளின் அனுபவக் களஞ்சியத்துடன் கலந்து விடுகின்றது. கற்றல் என்பது இயற்கையாற்றல்களைக் கொண்டு மேற்கட்டடம் அமைக்கப்பெறுகின்ற தென்பதற்கு மேலும் சில எடுத்துக்காட்டுக்கள் தருவோம். (எ டு. இசை-நுரையீரல்களிலிருந்து வரும் காற்றினல் நுண்ணிய குரல்காண்கள் அசைவுற்று ஏற்படும் துலங்கல் குரல் ஒசை யாகும். ஆளுல், பிறவித் துலங்கலாகிய குரலோசை பல மாறுதல்கள் அடைந்து ஏழிசையாய், இன்னிசையாய் மாறுகின்றது. இன்னொரு எடுத்துக்காட்டு நமது பேச்சு. குரல்நாண்களின் இயக்கத்தைக் கொண்டே பேச்சு வளர்ந்தது. அதிலிருந்து நமது பல்வேறு கருத்துக் களை எளிதாக எடுத்துக் கூறும் மொழிவளர்ச்சி ஏற்பட்டது. உலகமொழி கள் யாவும் மானிடக் குரல் காண்களினின்று எழும் இயற்கைத் துலங்க லாகிய குரல் ஒசையினின்றே எழுந்தவை என்பதை எண்ணும்பொழுது காம் வியப்புக்கடலில் ஆழ்கின்ருேம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/218&oldid=777964" இலிருந்து மீள்விக்கப்பட்டது