பக்கம்:கல்வி உளவியல்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றல் 199 கூடிய பயிற்சியில்ைதான் அவை முற்றுப்பெறுகின்றன. நான்கையும் ஐந்தையும் கூட்டுவது ஓர் எளிய கணக்கு. இதைச் செய்வதற்குக்கூட காமெல்லோரும் ஒரு முறையைக் கையாண்டிருப்போம். சிறு குழவிகள் இதனைச் செய்வதற்குப் புளியங்கொட்டைகள், சிறுகூழாங்கற்கள், விரல் கள் ஆகியவற்றைத் துணைகொள்ளுகின்றன. பலமுறை இவ்வாறு செய்தபின், முயற்சியும் தவறும் இன்றியே இதனைச் செய்கின்றன. இரண்டாவது, பார்த்துச்செய்து கற்றல். முன்னேயதைவிட இது சற்று உயர்ந்த முறை. அதனைப்போல் இது பொறியியக்கம் போன்றது மன்று. ஒரு சிக்கலான இயக்கத்தின் பகுதிகளைக் கண்டு, அவற்றைப் பின்பற்றுவதே பார்த்துச்செய்து கற்றலாகும். ஆனல், இங்கும் அடிப் படையான இயக்கங்களின் காரணங்களை அறியாமை காணப்பெறுகின் றது. கருத்தேற்றத்தில் பிறர் கருத்துக்களைத் தகுந்த முகாந்திரங் களின்றி ஏற்றுக் கொள்வதைப்போலவே, இங்கும் பிறர் இயக்கத்திட்டத் தைக் காரண காரியத் தொடர்பை யறியாமல் பின்பற்றுகின்ருேம். இச் செயல் மக்களிடமும் விலங்குகளிடமும் காணப்பெறுகின்றது. குரங்கு களின் பின்பற்றும் இயக்கம் காம் அறிந்ததே. பின்பற்றல் கற்பயன் அளிக்கவேண்டுமாயின், வீடுகளிலும், பள்ளிகளிலும், அலுவலகங்களி லும், தொழிற்சாலைகளிலும் சிறுவர்களும் முதிர்ந்தோரும் பின்பற்றக்கூடிய சிறந்த முன் மாதிரிகள் தேவை. மூன்ருவது, உற்றுக் நோக்கிக் கற்றல் . மேற்கூறிய இரண் டையும்விட இது சற்று உயர்ந்தது. முயன்று தவறிக் கற்றல் முறையில் எச்செயல் வெற்றி தருகின்றது என்பதை ஒருவாறு பார்க்கின் ருேம். பார்த்துச் செய்தலிலும் அச்செயலை ஓரளவு கவனிக்கின்ருேம். இங்கு பிரச்சினையை நாம் நேராகத் தாக்குவதால், உற்று நோக்குதல் அதிக அளவு கிகழ்கின்றது. மேற்கூறிய இரண்டு முறைகளையும்விட இது பிரச்சினையை நேராக அணுகுவதால், இம்முறை அவற்றைவிடச் சிறந்ததாகின்றது. இதில் நாம் தசைகளை இயக்குவதுடன் புலன்களையும் பயன்படுத்துகின் ருேம். தன்னம்பிக்கையுடன் பிரச்சினையின் கூறுகளை ஒருவாறு அறிகின்ருேம். நான்காவது, ஆக்கநிலை ஏற்றிய மறிவின4. பாவ்லோவ்' என்ற இரஷ்ய அறிஞரும், வாட்சன் என்ற அமெரிக்க அறிஞரும் கற்றல் agãosipi - suggestion. 30 -in earāśāsāpā-learning by observation. 13. zošā stånd s; þĝu tofsst&ar - conditioned reflex. + 2 lursi&sorsii - Pavlov. 1 a sur 3 sir-Watson.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/221&oldid=777972" இலிருந்து மீள்விக்கப்பட்டது