பக்கம்:கல்வி உளவியல்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 கல்வி உளவியல் பல வண்ண ஒவியங்களையும் படங்களையும் அவர்கள் பார்க்கச் செய்வு தாலும், சுற்றுலாமூலம் பல இடங்களுக்கு அழைத்துச் செல்லுவதாலும் அவர்களிடம் படிக்கும் ஆயத்தக் கூறினை உண்டாக்கலாம். சில காட்டச் சோதனைகளால் சிறுவர்கள் எப்பாடங்களுக்குப் பொருத்தம் என்ப தைக் கண்டறியலாம். மேலே கூறிய மூன்று விதிகளும் தார்ன் டைக் கண்ட முதல்நிலை விதிகள்’’ ஆகும். இவற்றுடன் சேர்த்துப் பயிலவேண்டிய ஐந்து துணைநிலை விதிகள் உள்ளன. அவற்றை உளவியல் நூல்களில் கண்டு கொள்க, கற்றலில் தேக்கம் : ஒரு குறிப்பிட்ட திருப்தியான அளவு முன்னேற்றத்திற்குப் பிறகு, கற்றலில் சிறிதும் முன்னேற்றமே இல்லாத ஒரு கிலே ஏற்படுகின்றது. இதற்குப் பிறகு மீண்டும் முன்னேற்றம் ஏற்படு கின்றது. இந்த முன்னேற்றமில்லாத காலப் பகுதி கற்றலில் தேக்கம்’ என வழங்கப்பெறுகின்றது. இத் தேக்கம் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. கற்போன் தன் தேர்ச்சியில் மனநிறைவு கொண்டு அதிகத்தேர்ச்சி பெறுவதற்கு முயற்சி செய்ய விரும்பாதிருக்கலாம் ; அல்லது அக்கறை குறைந்து போயிருக்கலாம்; அல்லது கற்பதில் அவநம்பிக்கை கொள்ள லாம் ; கற்கும் முறையும் பழுதுடையதாக இருக்கலாம். சிறிய சிறிய பகுதிகளைக் கையாண்டால், சில பாடங்களில் கல்ல தேர்ச்சி பெறலாம். தட்டச்சுப்பொறிகளை இயக்குதல் போன்ற சில பாடங்களில் சில அடிப் படைப் பழக்கங்களின் றியே*8, சிக்கலான பழக்கத்தையடைய முயலுவ தால் தேக்கம் ஏற்படுகின்றது. அடிப்படைப் பழக்கங்களில் தேர்ச்சி பெற்ற பிறகு சிக்கலான பழக்கத்தை அடைய முயன்ருல் கற்றல் விரை வாகப் போகும். சில சமயம் பழைய பழக்கங்களுக்கும் புதிய பழக்கங் களுக்கும் முரண் ஏற்பட்டுத் தேக்கம் உண்டாகலாம். கற்றலில் உண் டாகும் அலுப்பும் களைப்பும் தேக்கத்திற்குக் காரணமாகலாம். சிலசமயம் சிலர் தேர்ச்சியடைய வேண்டும் என்ற ஆர்வத்தினுல் அவசரப்பட்டு முதல் கிலேச் செயல்களேத் தன் வயமாக்காது அரைகுறையாய் அறிந்த உபாயங், களைக் கையாளுவதால் அடையும் பயன் குறைந்து, கற்றலில் தேக்கம் ஏற்படலாம். சிலர் கடினமான பழக்கத்திற்கும் நீண்ட ஓய்விற்கும் பிறகு தகுந்த பயனை அடைகின்றனர். இத் தகைய ஓய்வு நேரத்தை வீண் என்று கருதுதல் தவறு. பின்னல் விரைந்து கற்பதற்கு இஃது அடிப் படை என்பதை ஆசிரியர்கள் உணரவேண்டும். asert L3 Gers&ras - aptitude tests. zeggs sa saga: -primary iaw'$. 87 துணைகிலே விதிகள் - secondary laws. 2.8 அடிப்படைப் asgåsåsås - basic habits.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/228&oldid=777990" இலிருந்து மீள்விக்கப்பட்டது