பக்கம்:கல்வி உளவியல்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றல் 207 கற்றலுக்கு இன்றியமையாத நிலைமைகள்?? மேலே கற்றல் விதிகளை ஆராய்ந்தபொழுது பயன், பயிற்சி, ஆயத்தம் ஆகிய கூறுகள் கற்றலுக்கு இன்றியமையாத கில்ேகள் என்று கண்டோம். மேலும் சிலவற்றை ஈண்டு காண்போம். ஒட்டுமை 89 : இரண்டு செயல்கள் ஒன்ருகவோ அடுத்தடுத்தோ நிகழ்ந்தால் அவை இயைபினுல் இணைக்கப்பெறும். கற்றலுக்கு இத் தொடர்பு இன்றியமையாதது. பத்து திங்கள் கூட கிறைவு பெருத குழந்தையொன்று விளக்கைத் தொடக்கூடாது என்று கற்பதற்குக் காரணம், அது விளக்கைக் காண்பதற்கும் சூட்டையுணர்வதற்கும் உள்ள கால இடையீடு குறைவாக இருத்தலேவாகும். செயலுக்கும் அதன் விளைவிற்கும் கால இடையீடு அதிகரித்தால் கற்றல் அரிதாகும். எடுத் துக்காட்டாக மலேரியா என்ற குளிர்க்காய்ச்சலுக்கும், மஞ்சட்காய்ச்ச லுக்கும் கொசுவே காரணம் என்பதை இருபதாவது நூற்ருண்டின் தொடக் கத்தில்தான் கண்டனர். அதுவரை மக்கள் கொசுவால் கடியுண்டதை அறியாமல் இல்லை. சிலகாலம் கழிந்தபிறகே அந்நோய்கள் அவர்களைத் தாக்கின. கொசுவால் கடியுண்டதற்கும் நோயால் துன்புற்றதற் கும் கால இடையீடு அதிகமாக இருந்ததஞல் ஒன்று மற்றென் றுக்குக் காரணம் என்பதை அறியக்கூடவில்லை. ஆராய்வு : 'இ.தென்ன ? அ.தென்ன?’ என்று தொடர்ந்து கேட்கும் இயல்பும் - விடுப்பு' -கற்றலுக்கு அவசியம். ஒரு குழந்தை தன் திறன் குறைந்த, துன்பம் கிறைந்த முறைகளாலும் ஒரு பொருளை ஆராயலாம். (எ டு. விளக்கு சுடும் என்று குழந்தை அறிவது. முதியோர்மூலம் அதிகத் தீங்கு நேரிடாதவாறும் அதனைக் கற்கலாம். (எ.டு. " 5000-வோல்ட்டு அபாயம்’ என்று செந்நிற அறிவிப்புப் பலகையால் மின்சாரத்தின் அபாயத்தை அறிதல். ஒவ்வொருவரும் அதைத் தொட்டுப் பார்த்துத்தான் அறிய வேண்டுமென்பதில்லை. நோக்கமுடைமை : நோக்கமுடைமையும் கற்றலுக்கு இன்றியமை யாத ஏது. இதனை முன்னரே விரிவாகக் கூறியுள்ளோம். பிறர் தூண்டு தலின்றி மாளுக்கரே விரும்பியெடுக்கும் பாடங்களில் அதிக மதிப்பெண் கள் பெறுவதிலிருந்து இஃது ஓரளவு விளக்கமுறும். 2 gfääösoup&ëir - conditions. 309u.Govie - contiguity. s a so(otiu - curiosity. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/229&oldid=777992" இலிருந்து மீள்விக்கப்பட்டது