பக்கம்:கல்வி உளவியல்.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 கல்வி உளவியல் மொழி, வண்ணவேலை, இசை முதலிய பிற பாடங்கள் கற்பிக்கப் பெறும். கைத் தொழில் கதிரவன் போலிருக்க ஏனைய பாடங்கள் அதைச் சுற்றி இயங்கும் பிற கோள்கள்போல் தொடர்பு கொண் டிருக்கும். கதிரவனிடமிருந்து சூடு, ஒளி, ஆற்றல் முதலியவற்றைப் பிறகோள்கள் பெறுவதைப்போல் பிற பாடங்களும் தேர்ந்தெடுக்கப் பெற்ற கைத்தொழிலிலிருந்து தத்தமக்கு வேண்டிய பொருள்களைப் பெறும். எல்லாப் பாடங்களும் தாய்மொழி வாயிலாகவே கற்பிக்கப் பெறும்; அன்றியும், கலைத்திட்டத்தில் தாய்மொழிக்கே முதலிடம் தரப் பெற்றிருக்கின்றது. இந்துஸ்தானி மொழிக்கு இரண்டாவது இடம் அளிக்கப்பட்டிருக்கின்றது. ஆங்கிலத்திற்கு அதில் இடமே இல்லை. ஏழிலிருந்து பதின்ைகு வயதுவரை ஏழாண்டுகள் கட்டாயக் கல்வி இலவசமாக அளிக்கப்பெறல் வேண்டும். ஏழாண்டுகளில் குழந்தைகள் தொடக்கநிலைக் கல்வியுடன் உயர்நிலைக் கல்வியையும் பெறுகின்றனர் என்பது எண்ணிப் பார்த்தற்குரியது. இத்திட்டப்படி தொழிற்கல்வியால் மாளுக்கர்கள் உற்பத்தி செய்யும் பொருள்களிலிருந்து ஆசிரியர்களின் சம்பளத்திற்கும் போதிய வருவாய் ஏற்படும்படி செய்தல் வேண்டும். அன்றியும், அஹிம்சை, வாழ்க்கையுடன் ஒட்டிக் கல்வி பயிற்றல், சிறந்த குடிமகளுக வளர்ந்து தன் கடமைகளையும் உரிமைகளையும் பயனுள்ள துறைகளில் வழங்கல் போன்றவையும் இம் முறைக் கல்வி யின் முக்கிய நோக்கங்களாகும். வார்தாக் கல்வி முறைப்படி (1) ஏதாவது ஒரு கைத் தொழில் (2) தாய் மொழி (3) கணக்கு (4) சமூகப் பாடம் (5) பொது அறி வியல் (6) வண்ணவேலையும் ஓவியமும் (7) இசை (8) இந்துஸ்தானி (9) தேவையான குறைந்த அளவு நூல்நூற்றல் ஆகியவை கற்பிக்கப் பெறுதல் வேண்டும். நெசவு, தச்சுவேலை, காய்கறி பழத்தோட்டம், உழவுத்தொழில், வெவ்வேறு இடத்திற்கேற்ற ஏதாவதொரு வேலை ஆகிய வற்றில் ஏதாவதொன்றினைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஐந்தாம் வகுப்புவரை ஆண்பிள்ளைகளுக்கும் பெண்பிள்ளைகளுக்கும் ஒரே பாடத் திட்டம்தான் உண்டு : 5, 7 வகுப்புக்களில் திட்டத்தில் சிறிது மாற்றம் உண்டு. பெண்பிள்ளைகளுக்குக் குடும்ப அறிவியல் பாடமாகச் சேர்க்கப் பெற்றிருக்கின்றது. அடியிற் கண்டவாறு ஒருநாளின் பாடவேளைப்பட்டி* அமையும. 4sur-Gsuðbrûuu ty. - time-table.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/236&oldid=778008" இலிருந்து மீள்விக்கப்பட்டது