பக்கம்:கல்வி உளவியல்.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றலில் அடங்கிய மூலக்கூறுகள் 223 வாகக் காணப்பெறுகின்றன ; அவை தலைகாட்டுவதே இல்லை. குழந்தை யும் சரியாகவே நடந்து கொள்ளுகின்றது, மேலாகக் காணப்பெறும் நடத்தையிலிருந்து உண்மையான மனநிலை யைத் தெரிந்துகொள்ள இயலாது என்று நவீன உளவியல் கூறுகின்றது. அந்தக் கவர்ச்சிகளைக் குழவிகள் அறியாவெனினும், அவை கனவு கிலைக்கு வருவதே இல்லையெனினும், அவற்ருல் குழவிகளின் நடத்தை பாதிக்கப் பெறவில்லை என்று சொல்ல இயலாது. குரைத்த காயைக் கண்டு அஞ்சிய குழந்தை அந் நிகழ்ச்சி நேரிட்ட பல நாட்களுக்குப் பிறகு-அது மறந்து போன பிறகும்கூட-நாய்களைக் கண்டவுடன் பயப்படத்தான் செய்கின்றது. உண்மையாதெனின், நடத்தை என்பது மனம் முழுவதும் செயற்படுவதேயன்றி, ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியை மட்டிலும் கினேவிற்கொண்ட மனத்தின் ஒரு பகுதி மட்டிலும் செயற்படுவ தன்று. எனவே, குழவிகளின் நடத்தை அவர்களறியாத கவர்ச்சிகளா லும் பாதிக்கப் பெறுகின்றது என்பதை அறிகின்ருேம். ஆற்றை அணை கட்டித் தேக்குவதைப்போல் உறைப்பான இயல்பூக்கங்களின் அடிப்படை யிலமைந்த கவர்ச்சிகளைத் தேக்க முடியாது ; அவை எப்படியாவது வெளிப்படத்தான் செய்யும். சாதாரணமாக அவை குழந்தைகளின் மனக்கோட்டை விளையாட் டுக்களில்* வெளிப்படும். பொம்மைகளையும் பொம்மைப் பிராணிகளையும் கொண்ட விளையாட்டுக்களில் அவை கடுமையாக கடத்தப் பெறுவதைக் காணலாம். தாயாகவும் தந்தையாகவும் கற்பனை செய்து கொண்டு விளையாடும்பொழுது குழந்தைகள் தண்டனை தருவதில் பெருவிருப்பங் கொள்வதைக் காண்கின்ருேம். பெரும்பாலான உளவியலறிஞர்கள் மறந்த மூலத்தின் காரணமாக எழும் விரோத மனப் பான்மையையும் குற்றமுள்ள மனத்தையும் இவற்றில் வெளியிடுகின்றன என்று கருது கின்றனர். குழவிகள் இவ்விளையாட்டில் தம் உடற்குறைவையும் நிறைவு செய்து கொள்ளுகின்றனர். ஆகவே, குழந்தையின் நடத்தை யில் நசுக்கப் பெற்ற கவர்ச்சிகளும் பங்கு பெறுவதை அறிகின்ருேம். எனவே (4) இளங்குழவிகளின் கற்றலில் கவர்ச்சிகள் நசுக்கப் பெறுதலும் பங்கு பெறுகின்றது ; இக் கவர்ச்சிகள் மறக்கப்பெறினும், அவை அடுத்தாற்போல் குழந்தையின் நடத்தையிலும் கற்றலிலும் உறைப்பான முறையில் செல்வாக்கைச் செலுத்துகின்றன. மாளுக்கர்கட்குத் தாம் கற்கும் பொருளின் மீது அக்கறை இருப்பின், அதனை ஊன்றிக் கற்பது எளிதாகும். ஆளுல், பெரும்பாலான மாளுக்கர் 18மனக்கோட்டை விளையாட்டு - fantasy-play.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/245&oldid=778026" இலிருந்து மீள்விக்கப்பட்டது