பக்கம்:கல்வி உளவியல்.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 கல்வி உளவியல் அவர்கள் தோற்றமே உற்சாக அலையை எம்மருங்கும் வீசும். இப்படியும் அப்படியும் பார்க்கும் ஒரு சிறு பார்வையினலேயும், இங்கொன்றும் அங்கொன்றுமாக விடுக்கும் விளுக்களினலேயும் வகுப்பில் கவர்ச்சியை எழுப்பிவிடுவர். அவர்களுடைய ஆற்றல், நகைச்சுவை, கவர்ச்சி, வேலை யில் ஆர்வம் கற்றலுக்குப் பெருந்துண்டல்களாக அமைகின்றன. மாளுக்கரது கவர்ச்சிகளைக் கண்டறிதல்: மாளுக்கரது கவர்ச்சி களைக் காண்பதற்கும் ஆசிரியர்கள் பல முறைகளைக் கையாளுகின்றனர். (1) மாணுக்கனுக்கு இன்பம் தரும் தொழில்களையும், பொழுது போக்குச் செயல்களையும் எழுதும்படி செய்து அவற்றிலிருந்து அறிந்து கொள்ளுகின்றனர். (2) ஆசிரியர், பெற்ருேர், உடன்பயிலும் மாளுக்கர் ஆகியோர் ஒரு மானுக்கனை நேரில் கவனித்து, கவனித்தவற்றைப் பதிவேடுகளில் பதிந்துவைக்கலாம். மாணுக்கன் பல செயல்களில் கழிக்கும் நேரத்தையும் அவற்றில் அவனுக்குள்ள விருப்பத்தையும் கவர்ச்சியையும் இம்முறையில் அறியலாம். பள்ளிப்பாடங்கள், ஓய்வு நேரத்தைக் கழிக்கும்முறை, ஆடுகளநிகழ்ச்சிகள் முதலிய அனைத்தையுமே நாம் கவனித்தல் வேண்டும். (3) மாளுக்கன் பல செயல்களில் பங்கெடுக்க வாய்ப்பளிக்கும் சோதனை கிலைமைகளை அமைக்கலாம். இவற்றில் அவன் பங்கெடுக்கும் பொழுது அவனுடைய நடத்தைகளின் மூலம் அவனுடைய கவர்ச்சிகளை அறியலாம். பள்ளிச்செயல்களையே சோதனை நிலைமைகளாகக் கொண்டு ஒவ்வொரு பாடத்திலும் அவன் .காட்டும் அக்கறையிலிருந்து அவன் வாழ்க்கையில் எத்தொழில்களை விரும்பக்கூடும் என்பதை ஓரளவு அறுதியிடலாம். கவனம்' நாம் கனவு நிலையிலிருக்கும்பொழுது எண்ணற்ற தூண்டல்கள் நம்மைத் தாக்கியவண்ணமிருக்கின்றன ; நாம் ஒரு தூண்டல் சிக்கலாகிய கடலில் மூழ்கியே வாழ்கின்ருேம். நம்முடைய புலன்கள் சிலவற்றையே கொள்வன ; பெரும்பாலானவை புலன்கள் அறியாமலேயே மறை கின்றன. இவ்வாறு கம் புலன்கள் ஒரு தேர்தலை நடத்துகின்றன ; நம் முடைய மனமும் இத்தேர்தலில் பங்கு பெறுகின்றது. சில தூண்டற் கோலங்களை நீக்கிவிட்டு வேறு சிலவற்றிற்கேற்ப நாம் துலங்குகின் is assusorio - attention.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_உளவியல்.pdf/248&oldid=778032" இலிருந்து மீள்விக்கப்பட்டது